தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: உலக கேரம் போட்டியில் 3 தங்கங்கள் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Top 10 News: உலக கேரம் போட்டியில் 3 தங்கங்கள் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு.. இன்றைய டாப் 10 செய்திகள்

Marimuthu M HT Tamil

Nov 17, 2024, 11:55 PM IST

google News
Top 10 News: உலக கேரம் போட்டியில் 3 தங்கங்கள் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு.. இன்றைய டாப் 10 செய்திகள் குறித்துப் பார்ப்போம்.
Top 10 News: உலக கேரம் போட்டியில் 3 தங்கங்கள் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு.. இன்றைய டாப் 10 செய்திகள் குறித்துப் பார்ப்போம்.

Top 10 News: உலக கேரம் போட்டியில் 3 தங்கங்கள் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு.. இன்றைய டாப் 10 செய்திகள் குறித்துப் பார்ப்போம்.

Top 10 News: உலக கேரம் போட்டியில் தங்கம் வென்ற காசிமாவுக்கு குவியும் பாராட்டு, பற்றி இன்றைய டாப் 10 செய்திகள் குறித்துப் பார்ப்போம்.

  • சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச்சேர்ந்த காசிமா, அமெரிக்காவில் நடைபெற்ற 6ஆவது உலகக்கோப்பை கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் 3 பிரிவுகளில் தங்கம் வென்று உலக அளவில் சாதனைப் படைத்து, தமிழ்நாட்டுக்கு பெருமைத் தேடித்தந்துள்ளார் எனவும், வெற்றிப்பயணம் தொடரட்டும் எனவும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆட்டோ ஓட்டுநரின் மகளான காசிமா, தனிப்பிரிவு, இரட்டையர் பிரிவு, குழு போட்டி என 3 பிரிவுகளிலும் முதலிடம் பிடித்து அசத்தியிருக்கிறார்.
  • வாணியம்பாடியில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூளைச் சாவு அடைந்த அவினாஷ்(30) என்பவரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்களைத் தானமாக அவரது பெற்றோர் வழங்கினர். கடந்த 14ஆம் தேதி நடந்த விபத்தில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் 16ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார்.
  • தெலுங்கர்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி ரகுபதி ராஜா முன்பு ஆஜர்படுத்தப்பட்டார் நடிகை கஸ்தூரி. அவருக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். முன்னதாக ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் வீட்டில் பதுங்கி இருந்த நடிகை கஸ்தூரியை கைது செய்த போலீஸார் இன்று சென்னை அழைத்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

’அதிமுக கூட்டணியில் விசிக சேராது’

  • விசிக வேறு கூட்டணிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்தியா கூட்டணியில் தற்போது இருப்பதால், வேறு கூட்டணியை நாங்கள் உருவாக்கத் தேவையும் இல்லை என ‘திருமாவளவன் நம்மோடு தான் இருப்பார்’ என அதிமுக நிர்வாகி இன்பதுரை பேச்சுக்கு திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.
  • தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் பரவலாக மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கடலூர், அரியலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னை ஆர்.கே.நகரில் திமுக சார்பில், 'எளியோர் எழுச்சி நாள்' என்ற பெயரில் 48 இணைகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். ஒரு மணமக்களுக்கு தலா ரூ.25,000 மொய் மற்றும் கட்டில், மெத்தை, பீரோ, மிக்சி என 30 பொருட்கள் அடங்கிய சீர் வரிசை வழங்கப்பட்டது. அப்போது பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அரசின் திட்டங்களுக்கு கலைஞர் பெயரை வைப்பது குறித்த எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கூவத்தூரில் ஊர்ந்துபோன கரப்பான் பூச்சிபெயரை அதற்கு வைக்கலாமா எனப் பேசியிருக்கிறார்.

போலீஸ் டிஸ்மிஸ்

  • தஞ்சை அய்யம்பேட்டையில் திருநங்கையிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட காவலர் வினோத் என்பவரை, பணிநீக்கம் செய்து மாவட்ட எஸ்.பி.ஆஷிஷ் ராவத் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். இரவுநேரத்தில் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாக திருநங்கை அளித்த புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • மதுரை சின்ன உடைப்பு பகுதியில் விமானநிலைய விரிவாக்கத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்புத்தெரிவித்து நடந்த போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வீடுகளை காலிசெய்ய ஒருவாரம் அவகாசம் அளித்ததை அடுத்து போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டுள்ளது. விமானநிலையத்துக்கு இடம் கொடுத்தவர்கள் கூடுதல் இழப்பீடு, வேலைவாய்ப்பு கேட்டு வீடுகளை காலிசெய்ய மறுப்புத் தெரிவிக்கின்றனர்.
  • தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேகமலை அருவி என்னும் சின்ன சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. அபாய அளவைத் தாண்டி நீர்வரத்து உள்ளதால் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • கோவையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ய முயன்ற இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வேலைவாய்ப்பு குறித்த மீட்டிங் எனக்கூறி பள்ளி, கல்லூரி மாணவர்கள் அழைத்து வரப்பட்டது அம்பலமாகியுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை