வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டிப் பிடித்தல், முத்தம் கொடுத்தலும் குற்றம் ஆகாது என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறியுள்ளார்.
By Divya Sekar Nov 16, 2024
Hindustan Times Tamil
காதலித்து விட்டு திருமணம் செய்யாமல் ஏமாற்றியதாக இளம் பெண் அளித்த புகாரில் இளைஞர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்தும் உத்தரவு
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தம்மை காதலித்துவிட்டு திருமணம் செய்ய மறுத்ததாக இளம் பெண் ஒருவர் போலீசில் புகார்
அதில் காதலிக்கும் போது, இளைஞர் தம்மை கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்ததாக அந்த பெண் கூறி இருந்தார்.
அதன் அடிப்படையில் இளைஞர் மீது ஐபிசி 354ஏ பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் வளரிளம் பருவத்தில் காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் இயல்பானதாகவே பார்க்கப்படுவதாக கூறினார்.
காதலிப்பவர்கள் கட்டி பிடிப்பதும் முத்தம் கொடுப்பதும் ஐபிசி 354 ஏ பிரிவின் கீழ் குற்றமாக அமையாது என்று அவர் தெரிவித்தார்.
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்