Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை.. தேனியில் விறுவிறு சூட்டிங்-actor dhanush fourth film is titled idly kadai and the film is taking off briskly in theni - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை.. தேனியில் விறுவிறு சூட்டிங்

Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை.. தேனியில் விறுவிறு சூட்டிங்

Marimuthu M HT Tamil
Sep 19, 2024 11:25 PM IST

Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை படத்தின் சூட்டிங் தேனியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை.. தேனியில் விறுவிறு சூட்டிங்
Dhanush: ஆவி பறக்க வெளிவந்த அறிவிப்பு.. தனுஷ் இயக்கும் இட்லி கடை.. தேனியில் விறுவிறு சூட்டிங்

நடிகர் தனுஷ் இயக்குநர் அவதாரம் எடுத்து முதன்முறையாக இயக்கி, ஒரு சிறிய ரோலில் நடித்த படம், பவர் பாண்டி என்கிற ப. பாண்டி. அதன்பின், தனது 50ஆவது படமான ராயன் படத்தை தனுஷ் எழுதி, இயக்கி, நடித்திருந்தார். இந்நிலையில்,  தனது அக்கா மகனை கதையின் நாயகனாக வைத்து, ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்னும் காதல் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் இன்னும் ரிலீஸாகாத நிலையில், தனது சொந்த மாவட்டமான தேனியில் வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இது தன்னுடைய 52ஆவது படம் என்றும்,தன் இயக்கத்தில் வெளிவரும் நான்காவது படம் என்று நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.  மேலும் அதில் அப்படத்தின் பெயர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

தனுஷின் இட்லி கடை:

நடிகர் தனுஷ் தனது எக்ஸ் கணக்கில், தனது நான்காவது படத்தின் போஸ்டரைப் பகிர்ந்துள்ளார். அதில் #D52 #DD4 என்று குறிப்பிட்டு, ஓம் நமசிவாய என்னும் தெய்வ வார்த்தையுடன் கூப்பிய கைகள் மற்றும் இதயத்தின் எமோஜிகளை வைத்து தனது நான்காவது படத்தின் போஸ்டரைக் குறிப்பிட்டுள்ளார். அதில் இட்லி கடை என படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதில், சுவரொட்டியில் ஒரு நட்சத்திரங்கள் நிறைந்த இரவுக்கு எதிராக சாலையோர குடிசையில் ஒரு கடைக்காரர் இருப்பதையும், இன்னொருவர் அவரைப் பார்ப்பதையும் போன்று ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது. நடிகர் தனுஷ் இயக்கத்தில் அவர் நடிப்பில் உருவாகியுள்ள மற்ற நடிகர்கள் யார் என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜி.கே படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன், இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

கடந்த ஜூலை மாதம் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் தனுஷ் பலரிடம் தான் நடிக்க அட்வான்ஸ் வாங்கியதாகவும், ஆனால், தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்து படம் நடிக்கவில்லை என்றும் கண்டனம் தெரிவித்தது. 

மேலும், தனுஷை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பு தயாரிப்பாளர்கள் தங்களை அணுக வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அவருக்கு தற்காலிகத் தடையும் விதித்தது. அதன்பின், ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸிடம் வாங்கிய தொகையை திருப்பி தருவதாகவும், தேனாண்டாள் பிலிம்ஸுடன் இணைந்து படம் இயக்க ஒப்புக்கொண்டதாகவும் நடிகர் தனுஷ் ஒப்புக்கொண்டுள்ளார். தனுஷ் மீதான தடை நீக்கப்பட்ட பிறகு அவர் நடிக்கும் முதல் தமிழ்ப் படம், இட்லி கடையாகும். அவர் வேறு என்னென்ன சினிமாக்களில் கையெழுத்திட்டுள்ளார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தனுஷின் அடுத்த படைப்புகள்:

கடைசியாக தனுஷ் இயக்கி, நடித்த  50ஆவது படமாக வெளிவந்த ராயன் படத்தில் முன்னணி கதாபாத்திரத்திலும் தனுஷ் நடித்தார். இதற்கிடையே இயக்குநர் சேகர் கம்முலாவின் குபேரா படத்தில் நடித்து வருகிறார். அதில் ராஷ்மிகா மந்தனா, நாகார்ஜுனா மற்றும் ஜிம் சர்ப் ஆகியோரும் அவருடன் நடித்து வருகின்றனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் வெளியாகிறது.  அதன்பின், நடிகர் இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான மேஸ்ட்ரோ என்னும் டைட்டில் இடப்பட்ட படத்திலும் நடிக்கிறார். பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா காட்டூன் மற்றும் ரம்யா ரங்கநாதன் ஆகியோரை வைத்து நடிகர் தனுஷ் தனது மூன்றாவது படமான ’நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தை இயக்கி வருகிறார். இதில் நடிக்கும் பவிஷ், நடிகர் தனுஷின் அக்கா மகன் என்பது குறிப்பிடத்தக்கது. 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.