தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 News: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் சிறுவனை வீடு புகுந்து வெட்டிய கும்பல் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Top 10 News: 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை முதல் சிறுவனை வீடு புகுந்து வெட்டிய கும்பல் வரை - டாப் 10 நியூஸ் இதோ..!

Karthikeyan S HT Tamil

Nov 05, 2024, 02:08 PM IST

google News
Tamil Top 10 News: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை காவல் ஆணையர் உத்தரவு, நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய கும்பல் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.
Tamil Top 10 News: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை காவல் ஆணையர் உத்தரவு, நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய கும்பல் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

Tamil Top 10 News: தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை, சென்னை காவல் ஆணையர் உத்தரவு, நெல்லை அருகே வீடு புகுந்து சிறுவனை வெட்டிய கும்பல் உள்பட இன்றைய டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தமிழ்நாடு முழுவதும் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள், க்ரைம் செய்திகள், அரசியல் தொடர்பான முக்கிய செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

4 மாவட்டங்களில் கனமழை

தமிழ்நாட்டில் இன்று (நவ.5) மற்றும் நவ. 7, 8, 9 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

'ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்' திட்டம்!

மக்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், கல்வி முன்னேற்றத்திற்கும் அதிக கவனம் செலுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி 'ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்” திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் அனைத்து நூலகங்களையும் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று அமைச்சர் அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.

‘2026 தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்'

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில்தான் இருப்போம்; போகிற போக்கில் சிலர் சொல்வதற்காக விசிகவை சந்தேகக் கண்ணோடு பார்க்கிறார்கள் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா திறப்பு

கோவை விளாங்குறிச்சியில் எல்காட் நிறுவனம் சார்பில் ரூ.114.16 கோடியில் கட்டப்பட்ட புதிய தகவல் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார்.8 தளங்களுடன் 3.94 ஏக்கரில் தொழில்நுட்ப பூங்கா கட்டடத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார்.

சென்னை - புருனே இடையே விமான சேவை

சென்னை - புருனே இடையே நேரடி விமான சேவையை இன்று தொடங்கியுள்ளது ராயல் புருனே நிறுவனம். வாரத்திற்கு 3 சேவைகள் இயக்கப்படவுள்ளன. இதன்மூலம் புருனேக்கு நேரடி விமான சேவை வழங்கும் ஒரே இந்திய நகரம் என்ற சிறப்பை பெற்றுள்ளது சென்னை.

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

தாம்பரம் ரயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ள நிலையில் மோப்ப நாயுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். நடைமேடை முழுவதும் மோப்ப நாய் மூலம் சோதனை நடைபெற்று வருகிறது. சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

உயர்நீதிமன்றம் உத்தரவு

பாபநாசம் முதல் அகஸ்தியர் அருவி வரையிலான சாலைகளை விரைவில் சீரமைக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

காவல் ஆணையர் உத்தரவு

சென்னையில் வாகன சோதனைகளை தீவிரப்படுத்த காவல் ஆணையர் அருண் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து இணை ஆணையர் மேற்பார்வையில் 15 பேர் உள்ளடக்கிய காவல் துறையினர் தணிக்கை செய்ய உத்தரவு. காலை 9-11, மாலை 5-9 நேரங்களில் வாகன சோதனை நடத்த அறிவுரை; திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட பகுதிகளில் சோதனை நடத்த உத்தரவு; போதைப்பொருள் கடத்தல், செல்போன் பறிப்பு, ரவுடிகளை கண்காணிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

"இபிஎஸ் மனுவை ஏற்கக் கூடாது" தயாநிதி மாறன் ஆட்சேபம்

அவதூறு வழக்கில் இருந்து விடுவிக்க கோரி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை ஏற்கக் கூடாது என திமுக எம்பி தயாநிதிமாறன் தரப்பில் சிறப்பு நீதிமன்றத்தில் பதில்மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நெல்லை அருகே பயங்கரம்

நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகே ஒரு சமூகத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை மற்றொரு சமூகத்தை சேர்ந்த கும்பல் வெட்டியதால் பரபரப்பான சூழல் நிலவி வருகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பேரை பாளையங்கோட்டை தாலுகா காவல் துறையினர் இன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் ,சிறார் நீதி சட்டம், கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி