துணிந்து இறங்கிய விஜய்.. மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம்.. இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய்.. சவுக்கு சங்கர்
துணிந்து இறங்கிய விஜய்.. மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம்.. இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய் என பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார்.

அரசியிலில் துணிந்து இறங்கிய விஜய் பற்றியும், மனசு முழுக்க திமுகவினருக்கு வக்கிரம் இருப்பது பற்றியும், இன்றைய தலைமுறையினரின் நம்பிக்கை விஜய் குறித்தும் சவுக்கு சங்கர் பேட்டியளித்துள்ளார்.
இதுதொடர்பாக பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ரெட் பிக்ஸ் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, ‘’ விஜய்யின் மாநாடு வெற்றிகரமாக நடந்துமுடிந்திருக்கிறது. அதை ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும். சரி, 1990-களின் முற்பகுதியில் கலைஞர் தன் மகன் ஸ்டாலினைவிட வைகோ முதன்மையாக வருகிறார் என்பதை உணர்ந்து, வைகோ மீது கொலைப்பழி சுமத்தி திமுகவை விட்டு வெளியேற்றுகிறார். அப்போது வைகோவுக்கு ஆதரவாக நடந்த பேரணியில், காசு கொடுத்துக்கூப்பிடாமல் கூடிய கூட்டம் என்பது திமுகவினர், அதிமுகவினர் இதுவரைக் கூட்டாதது. அப்போது வைகோ, திமுகவை விட்டு வெளியில் வந்து மிகப்பெரிய நம்பிக்கையாக இருந்தார்.
தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது - சவுக்கு சங்கர்:
இப்போது தமிழக அரசியலில் வெற்றிடம் இருக்கிறது. இருபெரும் அரசியல் தலைவர்கள் இல்லை. நம் காலத்தோடு ஒப்பிடும்போது, இப்போது இருக்கும் இளம் தலைமுறையினர் அரசியல் மயப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். உங்களுக்கும் நமக்கும் பேப்பர் தான் வழி. இன்றைய சோசியல் மீடியாவில் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் டீன்ஸ்-களுக்கு அரசியல்சார்ந்த செய்திகள் போய்ச்சேரத்தான் செய்கின்றன. பெரும்நம்பிக்கையான அரசியல் தலைவர்கள் இல்லாதபோது, இப்போது இருக்கும் டீன்ஸ் விஜய்யால் ஈர்க்கப்படத்தான் செய்வார்கள்.