தவெக முக்கிய ஒப்பந்தம் முதல் காவல் ஆய்வாளர் மீது வழக்கு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக முக்கிய ஒப்பந்தம் முதல் காவல் ஆய்வாளர் மீது வழக்கு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

தவெக முக்கிய ஒப்பந்தம் முதல் காவல் ஆய்வாளர் மீது வழக்கு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

Karthikeyan S HT Tamil
Oct 24, 2024 06:51 PM IST

தமிழக வெற்றிக் கழகம் ஒப்பந்தம், தொடரும் வெள்ள அபாயம், காவல் ஆய்வாளர் மீது வழக்கு உள்ளிட்ட இன்றைய மாலை நேரத்திற்கான டாப் 10 செய்திகளை இந்த தொகுப்பில் சுருக்கமாக காணலாம்.

தவெக முக்கிய ஒப்பந்தம் முதல் காவல் ஆய்வாளர் மீது வழக்கு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!
தவெக முக்கிய ஒப்பந்தம் முதல் காவல் ஆய்வாளர் மீது வழக்கு வரை.. இன்றைய டாப் 10 செய்திகள் இதோ..!

தமிழ்நாடு முழுவதும் இன்று (அக்டோபர் 24) நடந்த முக்கிய நிகழ்வுகளை இந்தச் செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

தமிழக வெற்றிக் கழகம் ஒப்பந்தம்

விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் 100 அடிக்கு வைக்கப்படும் கொடிக் கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றுகிறார் அக்கட்சியின் தலைவர் விஜய். கொடிக்கம்பத்தை 5 ஆண்டுகளுக்கு அப்புறப்படுத்தக்கூடாது என்று மாநாட்டுத் திடலின் சொந்தக்காரரான விவசாயி மணி என்பவருடன் தவெக சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

தொடரும் வெள்ள அபாய எச்சரிக்கை

கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையில் இருந்து வினாடிக்கு 6,792 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள அபாய எச்சரிக்கை 9 வது நாளாக தொடர்கிறது.

முதலமைச்சர் கோப்பையை கைப்பற்றியது சென்னை மாவட்டம்

முதலமைச்சர் கோப்பை போட்டியில் சென்னை மாவட்ட அணி 105 தங்கம் என மொத்தம் 254 பதக்கங்களை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. 31 தங்க பதக்கங்களை கைப்பற்றி மொத்தம் 93 பதக்கத்துடன் செங்கல்பட்டு மாவட்ட அணி 2-ம் இடத்தை பெற்றது. 23 தங்க பதக்கம் உட்பட 102 பதக்கங்களை கைப்பற்றி கோவை மாவட்ட அணி 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

பெங்களூரு கட்டட விபத்து: 2 தமிழர் குடும்பத்துக்கு நிதியுதவி

பெங்களூரு ஹென்னூரில் பெய்த கனமழையின் காரணமாக கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த தமிழர்கள் இருவரின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு. க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் சிவசங்கர்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்டண உயர்வு தொடர்பாக புகார் வந்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படாது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். தீபாவளிக்காக 1000 தனியார் பேருந்துகளை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தியுள்ளோம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

2வது நாளாக முடங்கி போக்குவரத்து

கொடைக்கானலில் நேற்று பெய்த மழை காரணமாக அடுக்கம், பெரியகுளம் செல்லக்கூடிய சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டு 2வது நாளாக போக்குவரத்து முடங்கியது. இதையடுத்து, சாலையில் குவிந்த ராட்சத பாறைகளை உடைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரேசன் கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அனைத்து நியாயவிலைக் கடைகளும் வருகின்ற ஞாயிற்றுக் கிழமை செயல்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

கப்பல் போக்குவரத்து ரத்து

டானா புயல் சின்னம் காரணமாக நாகை - இலங்கை காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஒரு நாள் ரத்து செய்யப்பட்டது.

"இது பொருத்தமில்லாதது" - கிருஷ்ணசாமி கருத்து

திமுக கூட்டணியில் இருந்து கொண்டு, முதல்வர் வேட்பாளர் தொல்.திருமாவளவன் என்று கூறுவது பொருத்தம் இல்லாதது. திருமாவளவன் முதல்வராக வேண்டும் என்றால் அந்தக் கூட்டணியில் இருந்து விடுதலைச் சிறுத்தைகள் வெளியே வரவேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தி உள்ளார்.

காவல் ஆய்வாளர் மீது வழக்கு

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1.47 கோடி மோசடி செய்த புகாரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஏசுராஜசேகரன் மீது 5 பிரிவுகள் கன்னியாகுமரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்த நிலையில், இன்று முதல் தகவல் அறிக்கை தயார் செய்யப்பட்டது.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.