தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  தவெக மாநாட்டுத் திடலில் மயங்கி விழுந்த தொண்டர்கள், வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி.. மேலும் முக்கிய செய்திகள்

தவெக மாநாட்டுத் திடலில் மயங்கி விழுந்த தொண்டர்கள், வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி.. மேலும் முக்கிய செய்திகள்

Manigandan K T HT Tamil

Oct 27, 2024, 01:09 PM IST

google News
தமிழக அளவில் இன்று அக்டோபர் 27ம் தேதி நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்.
தமிழக அளவில் இன்று அக்டோபர் 27ம் தேதி நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்.

தமிழக அளவில் இன்று அக்டோபர் 27ம் தேதி நடந்த முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பை பார்க்கலாம்.

கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி நடந்த பேச்சுப்போட்டி இறுதிச்சுற்றில் வென்ற பேச்சாளர்களுக்கு சான்றிதழ், பரிசுகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். மேலும் டாப் 10 செய்திகளை பார்ப்போம்.

  •  சென்னையில் வடகிழக்கு பருவமழை இன்று காலை வரை இயல்பை விட 59% கூடுதலாகவும், தமிழ்நாட்டில் 46% கூடுதலாகவும் பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
  •   தவெக மாநாடு நடக்கும் விக்கிரவாண்டியில் கொளுத்தும் வெயிலால் தொண்டர்கள் மயக்கம் அடைந்தனர். வெயிலின் தாக்கத்தால் மயக்கம் அடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

போலீஸார் காயம்

  •  பசும்பொன் குருபூஜைக்கு பாதுகாப்பிற்கு சென்ற போலீஸ் வாகனம் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 போலீசார் காயம். கூகுள் மேப்பை பார்த்துக் கொண்டு ராமநாதபுரத்தில் இருந்து கமுதி செல்லும் போது அதிகாலை 4 மணியளவில் கண்மாயில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.
  •   த.வெ.க முதல் மாநில மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் வெளியானது. 2 மணிக்கு மேல் கலை நிகழ்ச்சி தொடங்குகிறது. 4 மணி முதல் 4.30 மணிக்குள் கொடி ஏற்றும் விஜய், 6 மணிக்கு விழா மேடையில் சிறப்புரை ஆற்றுகிறார்.
  •   த.வெ.க. மாநாடு நடப்பதை ஒட்டி, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விழுப்புரம், முண்டியம்பாக்கம், விக்கிரவாண்டி பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இன்று திறக்க வேண்டாம் என நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
  •   "தவெக மாநாடு சிறப்பாக நடக்க எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
  •  பிரான்ஸில் உள்ள பழமையான தேசிய நூலகத்தில் தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியர்களுடன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் சென்றார்.

சீமான் கருத்து

  •  விஜய் மாநாட்டில் வைத்துள்ள கட்-அவுட் அல்ல ; கருத்துகள்தான் அரசியல்; விஜய்யின் மாநாடு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். பிரபாகரனை நான் வைத்திருக்கிறேன் என்பதால் விஜய் வைக்காமல் இருந்திருக்கலாம்; அம்பேத்கரின் கட் அவுட் வைப்பது பெரிதல்ல; அவரின் கருத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
  •   இந்தியாவிலேயே வேளாண்மைத் துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாகத் திகழ்கிறது விவசாயிகளுக்கு ரூ.5, 148 கோடி பயிர்க் காப்பீட்டு இழப்பீட்டுத் தொகை தரப்பட்டது; கரும்பின் விலை டன்னிற்கு ரூ.2,750 என்பது ரூ.3,134.75ஆக உயர்த்தப்பட்டது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  •  தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நடைபெறும் இடத்தில் சுமார் 1 லட்சம் பேர் குவிந்தனர் விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியில் சுமார் 1 லட்சம் தொண்டர்கள் குவிந்துள்ளனர்.
  •  தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்குச் சென்ற டெம்போ வாகனம் கவிழ்ந்ததில் 11 பேர் காயம் சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் லாரியை முந்தி செல்ல முயன்றதில் ஏற்பட்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 11 பேர் காயம் அடைந்தனர்.
  •  குற்றாலம் அருவிகளில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அருவிக்கு நீர்வரத்து சீரான நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
  •  தவெக மாநாடு நடைபெறும் வி.சாலையில் சுமார் 2 கி.மீ.,தூரம் வாகனங்கள் வரிசை கட்டி நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை