வேலை முக்கியமில்லை! விஜய் தான் முக்கியம்! சரக்கு தம் என அமோக விற்பனை! தாறுமாறு தவெக மாநாடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று விழுப்புரத்தில் நடக்க உள்ள நிலையில் மாநாடு நடக்கும் இடத்தில் கட்டுக்கடங்காமல் வரும் தொண்டர்கள் கூட்டத்தால் பல குளறுபடிகள் நிலவி வருகின்றன.
நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சாலையில் நடக்க உள்ளது. இதனை அடுத்து அம்மாநாட்டிற்கு இன்று அதிகாலையில் இருந்தே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் விஜயை பார்ப்பதற்காக குவிய தொடங்கினர். மேலும் நேற்று முதலே பல மாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களில் இருந்தும் விஜயை காணுவதற்காக அவரது தொண்டர்கள் பலர் விழுப்புரத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர்.
குறிப்பாக நேற்று இளம் பெண் ஒருவர் கையில் தளபதி என்ற பெயரை பச்சை குத்தியதுடன் கர்நாடக மாநிலத்திலிருந்து தளபதி விஜய் பார்ப்பதற்காகவும் சுய விருப்பத்தின் அடிப்படையில் வந்திருப்பதாக ஊடகங்களில் கூறியிருந்தார். இந்நிலையில் இன்று ஒரு இளைஞர் தான் வேலைக்கு விடுமுறை எடுத்து இந்த மாநாட்டிற்கு வந்திருப்பதாகவும் எனக்கு வேலையை விட விஜயின் தமிழக வெற்றிக்கழகம் மே முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.
மது மற்றும் சிகரெட் விற்பனை
தமிழகம் வெற்றி கழகம் சார்பில் வரும் தொண்டர்களுக்கு குடிநீர் வசதி மற்றும் கழிப்பறை வசதி ஆகியவை மட்டுமே செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக மாநாட்டிற்கு வருபவர்கள் யாரும் உணவு உணவு உண்ணாமல் வர வேண்டாம் எனவும், அனைவரும் சாப்பிட்டு விட்டு வர வேண்டும் எனவும் கட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை முதலே மாநாட்டு நடப்பதற்கான அமைக்கப்பட்ட இடத்தில் குவிந்த கூட்டத்தால் பல குளறுபடிகள் நிலவி வருகின்றனர்.
கூச்சல் குழப்பம் மற்றும் பல ரசிகர்கள் உணவு கேட்டு கட்சி தொண்டர்களை வற்புறுத்தி வருகின்றனர். மேலும் சிலர் அப்பகுதியில் மது மற்றும் சிகரெட்களை விற்றுக் கொண்டிருக்கின்றன இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது மேலும் ஒரு அரசியல் கட்சி மாநாட்டில் சரக்கு மற்றும் தம் விற்பனையாவது கண்டனத்துக்கு உரியது எனவும் அரசியல் பிரமுகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
நடிகரின் கட்சி என்பதனால்
காவல்துறை சார்பில் தவெக மாநாட்டிற்கு கட்டுக்கடங்காக கூட்டம் வர இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடம் காவல்துறையினர் அறிவுறுத்தியில்லதாகவும் கூறப்படுகிறது.தவெக மாநாட்டிற்கு வரும் கூட்டம் நடிகர் விஜய் என்பதனால் மட்டுமே இந்த அளவு கூட்டங்கள் கூடியுள்ளதாக சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த கட்டுக்கடங்கா கூட்டத்தை தவெக கட்சியினால் மட்டுமல்லாது காவல்துறையினராலும் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதே உண்மை மேலும் கட்சி மாநாட்டிற்கு வருவதற்கு முன்பு பல அறிவுரைகளையே கட்சி சார்பில் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அதை எதையும் கடைபிடிக்காமல் தொண்டர்கள் வந்திருப்பது கட்சி நிர்வாகத்தை அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.
அத்துமீறும் தொண்டர்கள்
85 ஏக்கர் பரப்பளவில் மாநாடு நடக்கும் இடத்தில் ஏற்பாடுகள் நிறைவு பெற்றுள்ளது. மாநாட்டுக்காக 60 அடி அகலம், 170 அடி நீளத்துக்கு மேற்கூரையுடன் மேடை அமைக்கப்பட்டதுடன், மேடையில் இருந்து 800 மீட்டர் தொலைவுக்கு விஜய் நடந்து சென்று ரசிகர்களை சந்திக்கும் வகையில் ரேம்ப் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில் தொண்டர்கள் பங்கேற்க தனித்தனியாக இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர 40 கேபின்கள் அமைத்து அதில் 55 ஆயிரம் இருக்கைகள் போடப்பட்டுள்ளது. இத்தனை ஏற்பாடுகளையும் தாண்டி எண்ணிலடங்கா தொண்டர்கள் வந்துக் கொண்டிருக்கின்றனர்.
மாநாடு நடக்கும் இடத்திற்கு நேற்று முதலே தொண்டர்கள் குவியத் தொடங்கினர். அதுமட்டுமல்லாமல், மாநாடு தொடங்கும் முன்பே அத்துமீறி நுழைந்து இருக்கைகளை எடுத்து கத்தி களேபரம் செய்து வருகின்றனர். இதனால், மாநாடு திட்டமிட்டபடி அமைதியாக நடக்குமா? என்ற சந்தேகம் அதிகரித்துள்ளது.
டாபிக்ஸ்