தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Top 10 Tamil News: கோவையில் 10 கார் எரிந்தது.. ஷூ தாக்குதலில் போலீஸ்.. மீனவர்களுக்கு ரூ1.5 கோடி அபராதம்!

Top 10 Tamil News: கோவையில் 10 கார் எரிந்தது.. ஷூ தாக்குதலில் போலீஸ்.. மீனவர்களுக்கு ரூ1.5 கோடி அபராதம்!

Sep 04, 2024, 10:14 AM IST

google News
தமிழகம் முழுவதும் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் முழுத்தொகுப்புகள் இதோ உங்களுக்காக, காலையில் கட்டாயம் அறிய வேண்டிய டாப் 10 செய்திகள்.
தமிழகம் முழுவதும் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் முழுத்தொகுப்புகள் இதோ உங்களுக்காக, காலையில் கட்டாயம் அறிய வேண்டிய டாப் 10 செய்திகள்.

தமிழகம் முழுவதும் நடந்த முக்கியமான நிகழ்வுகளின் முழுத்தொகுப்புகள் இதோ உங்களுக்காக, காலையில் கட்டாயம் அறிய வேண்டிய டாப் 10 செய்திகள்.

தமிழ்நாட்டில் இன்று காலை நிலவரப்படி அறிந்து கொள்ள வேண்டிய முக்கியமான டாப் 10 செய்திகள் இதோ!

1.வாழ்த்துக்கள் மாரியப்பன் தங்கவேலு

பாரிஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில்உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் தன்னுடைய வாழ்த்துக்களை அவர் பகிர்ந்துள்ளார். 

2.இன்று தொடங்கும் கலந்தாய்வு

தமிழ்நாடு இளநிலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பிற்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று, மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள் போன்ற சிறப்பு பிரிவின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது. 

3.பெண் டிஎஸ்பி மீது தாக்குதல்; 8 பேர் மீது வழக்கு

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி மீது தாக்குதல் நடத்திய 8 பேர் மீது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தாக்குதலில் ஈடுபட்ட  7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

4.ஷோரூமில் தீவிபத்த; 10 கார்கள் கருகின

கோவை சூலூர் அருகே ரங்கநாதபுரத்தில் மாருதி சுசூகி ஷோ ரூமில் தீவிபத்து. அங்கு முழுவதும் தீ பரவியதால், 10க்கும் மேற்பட்ட கார்கள் எரிந்தன. எஞ்சியுள்ள கார்களை காப்பாற்றும் பணி நடந்து வருகிறது. காலை நேரம் என்பதால், பணியாளர்கள் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு மீட்பு படையினர் தொடர்ந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

5. கொதிக்கும் நெய் பாத்திரத்தில் தலை வைத்து வழிபாடு

மதுரை மாவட்டம் சௌந்திரபாண்டியன் நகர் ஆதிபராசக்தி கோயிலில் திருவிழா நடைபெற்றது. அதில் சாமி ஆடியவர்கள், அடுப்பில் இருந்த சூடான சட்டியில் கொதித்துக் கொண்டிருந்த நெய் ரொட்டியில் தலையையும், கைகளையும் வைத்து வினோத வழிபாடு செய்தனர். ஆரோக்கியமான உடல்நலம் மற்றும் உழைத்து வாழும் ஆற்றல் வேண்டிய இந்த நூதன வழிபாட்டு முறையை, நரிக்குறவர் இன மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். 

6. காசு கேட்ட கடைக்காரருக்கு ஷூ அடி

தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே தனியார் உணவகத்தில் உணவு உண்ட சிறப்பு காவல் ஆய்வாளர் காவேரி என்பவர், சாப்பிட்ட பின் தன்னிடம் பணம் ரூ.20 கேட்ட உரிமையாளர் முத்தமிழ் என்பவரை தாக்கியுள்ளார். வாக்குவாதம் முற்றி, காலில் உள்ள ஷூவை கழட்டி கடை உரிமையாளரை அவர் அடிக்க சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

7.மீனவர்களுக்கு ஒன்றரை கோடி ரூபாய் அபராதம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தூத்துக்குடி மாவட்ட மீனவர்களை இலங்கை கடற்படை செய்திருந்தது. அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மீனவர்களுக்கு தலா ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்தது இலங்கை நீதிமன்றம். 

8. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; டாக்டர் கைது

திருச்சியில் விடுதியில் தங்கி படித்த பள்ளி மாணவிளுக்கு பாலியல் தொல்லை. அரசு உதவிபெறும் பள்ளியின் தலைமை ஆசிரியரின் மகனும், அரசு மருத்துவருமான டாக்டர் சாம்சன் என்பவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து சாம்சன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக, மாணவிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. 

9. குரூப் 4 தேர்வு முடிவுகள்- ரிசல்ட் தேதி அறிவிப்பு

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணிக்கான தேர்வுகள் நிறைவுபெற்ற நிலையில், 5 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதினர். தேர்வு நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள், அடுத்த மாதம் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. 

10. தி கோட் சிறப்பு காட்சி அனுமதி கிடைக்குமா?

தமிழகத்தில் விஜய் நடித்த ‘தி கோட்’ திரைப்படம் நாளை வெளியாகிறது. இப்படத்திற்கான சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டு, கடந்த 10 நாட்களுக்கு முன் விண்ணப்பித்த நிலையில், இதுவரை அனுமதி தரப்படவில்லை. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு சிறப்பு காட்சிகள் திரையிடப்படுகிறது. புதுச்சேரியில் 4 நாட்களுக்கு சிறப்பு காட்சிகளுக்கு ஏற்கனவே அனுமதி தரப்பட்டுள்ளது. 

அடுத்த செய்தி