Thoothukudi: உலக புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய திருவிழா தொடங்கியது!
- தூத்துக்குடி உலக புகழ்பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 442 ஆவது ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஜெபமாலையுடன் பெருவிழா பிரார்த்தனைகள் தொடங்கின. காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. கூட்டுத்திருப்பலி முடிந்ததும் பேராலயத்தில் இருந்து திருக்கொடியை ஆயர் ஸ்டீபன், மேளதாளங்கள் முழங்க, பேராலயத்தை சுற்றி பவனியாக எடுத்து வந்த நிலையில், கொடிமரத்தில் காலை 8.40 மணிக்கு அன்னையின் திருக்கொடியை ஆயர் ஏற்றி வைத்தார். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.