தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  International Fire Fighters Day : சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

International Fire Fighters Day : சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

Priyadarshini R HT Tamil
May 04, 2024 05:28 AM IST

International Fire Fighters Day : சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

International Fire Fighters Day : சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?
International Fire Fighters Day : சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் வரலாறு, கருப்பொருள் மற்றும் முக்கியத்துவம் என்ன?

ட்ரெண்டிங் செய்திகள்

இந்த நாளை கடைபிடிக்க பல்வேறு வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான், தற்போதைய மற்றும் முன்னாள் தீயணைப்பு படை வீரர்களின் பங்களிப்புக்கு நன்றி கூறுவது ஆகும். 

மற்றொரு வழி, ஊதா மற்றும் சிவப்பு ரிப்பன்களை அணிந்துகொள்வது ஆகும். இந்த ரிப்பன்கள், தீயணைப்பு வீரர்களின் முக்கிய விஷயங்களை எடுத்துக்காட்டுவது ஆகட்டும். சிவப்பு நிறம், தீயையும், ஊதா தண்ணீரையும் குறிக்கும்.

இந்தாண்டு சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம் சனிக்கிழமை மே 4ம் தேதியான இன்று கடைபிடிக்கப்படுகிறது.

வரலாறு

1998ம் ஆண்டு டிசம்பர் 2ம் தேதி, ஆஸ்திரேலியாவின் லின்டனில் ஒரு கொடூர விபத்து ஏற்பட்டது. அதில் கீலாங் வெஸ்ட் ஃபயர் பிரிகேட்டைச் சேர்ந்த 5 தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த கொடூர சம்பவத்தில் இருந்துதான் இந்த சர்வதேச தீயணைப்பு வீரர்கள் நாள் உருவானது.

அந்த 5 தீயணைப்பு வீரர்களும், தங்களின் டேங்கரில் தண்ணீர் நிரப்புவதற்காக சென்றுகொண்டிருந்தார்கள். அப்போது கடுமையான காற்றில் சிக்கி உயிரிழந்தனர். அவர்கள் கேரி விரிடவெல்ட், கிரிஸ் ஈவான்ஸ், ஸ்டூவர்ட் டேவிசன், ஜேசன் தாமஸ், மேத்யூ ஆர்ம்ஸ்ட்ராங் ஆவர்.

இந்த நாளையும், இவர்களையும் நினைவுகூறும் வகையிலும் தான் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. அந்த நாளில் தீயணைக்கும் பணியின்போது, தங்களின் உயிரை மாபெரும் மக்கள் சேவைக்காக இழந்த உலகம் முழுவதும் உள்ள அனைவரும் நினைவுகூறப்படுகிறார்கள். 

இந்த நாளில் செயின்ட் ஃப்ளோரியன் என்ற தீயணைப்பு வீரர் உயிரிழந்தார். இவர் ரோம் சம்ராஜ்யத்தின் முதல் தீயணைப்பு படையின் காமாண்டர் ஆவார். இவர் பணியின்போது உயிரிழந்தார்.

லின்டனில் நடந்த இந்த துயர சம்பவம், உள்ளூர் மற்றும் உலகளவில் உள்ள தீயணைப்பு வீரர்களை பாதித்தது. அது பாதிக்கப்பட்டவர்கள் மீது அனுதாபத்தையும், அவர்களுக்கு ஆதரவையும் வழங்கியது. அவர்கள் இந்த நாளில் லின்டன் கல்லறையில் நினைவுகூறப்படுகிறார்கள்.

முக்கியத்துவம்

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினம், தீயணைப்பு வீரர்களின் துணிச்சல் மற்றும் அர்ப்பணிப்பை கொண்டாடும் வகையிலும், அதற்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையிலும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் சேவைக்காக உயிரிழந்தவர்களின் தியாகமும் நினைவுகூறப்படுகிறது. அவர்களின் குடும்பத்தினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சமூகத்துக்கு நாம் கொடுக்கும் ஆதரவையும் அது நினைவுகூறுகிறது.

இந்த நாளில் உள்ளூர் தீயணைப்பு வீரர்கள் ஏற்பாடு செய்யும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேணடும். இந்த நாளில் உலகம் முழுவதும் இந்நாள்வரை உயிரிழந்த வீரர்களின தியாகத்துக்கு மதிப்பளிக்கவேண்டும். அதுதான் இந்த நாளில் பங்கெடுக்க நாம் செய்வது ஆகும். சிவப்பு, ஊதா ரிப்பன் அணிந்தும், நாம் நன்றியை தெரிவிக்கலாம்.

சர்வதேச தீயணைப்பு வீரர்கள் தினத்தின் இந்தாண்டு கருப்பொருள்

கடுமையான நேரங்கள் ஹீரோக்களை உருவாக்காது என்பதாகும். எனவே இந்த நாளில் உங்கள் அருகில் நடைபெறும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மக்கள் சேவைக்காக தங்கள் இன்னுயிரை தியாகம் செய்த தீயணைப்பு வீரர்களை நினைவுகூறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்