IAS Transfers: முக்கிய துறைகளின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்த தமிழ்நாடு அரசு! ஏன் தெரியுமா? இதோ முழு விவரம்!
Jun 13, 2024, 09:00 PM IST
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது.
ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள உத்தரவில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை, மனிதவள மேலாண்மை துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, நிதித்துறை, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு சர்க்கரை கழகம் உள்ளிட்ட துறைகளை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யபப்ட்டு உள்ளனர்.
ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம் விவரம்
இதன்படி, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராக உள்ள ரீதா ஹரிஷ் தாகூர் ஐ.ஏ.எஸ், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
பொது மற்றும் மறு வாழ்வுத்துறை செயலாளராக உள்ள கே.நந்தகுமார் ஐ.ஏ.எஸ், மனிதவள மேலாண்மை துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் எஸ்.நாகராஜன் ஐ.ஏ.எஸ், நிதித்துறை (செலவுகள்) செயலாளராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக சகி தாமஸ் வைத்தியன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநர் இ.சரவணவேல் ராஜ் ஐ.ஏ.எஸ், புவியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவராக உள்ள சி.விஜயராஜ் ஐ.ஏ.எஸ், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தபபட்டோர், சிறுபான்மையினர் நலத் துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாடு சர்க்கரை கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ள டி.அன்பழகன் ஐ.ஏ.எஸ் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
உலக வர்த்தக அமைப்பிற்கான இந்தியாவின் முன்னாள் தூதர் பிரஜேந்திர நவ்னிட் ஐ.ஏ.எஸ், வணிகவரி மற்றும் பதிவுத்துறையின் முதன்மை செயலாளராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். தனது விடுப்பு முடிந்து இப்பொறுப்பை ஏற்பார் என்றும், 16ஆவது நிதிக்குழுவின் சிறப்பு அதிகாரியாகவும் செயல்படுவார் என்றும் தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் இணை ஆணையர் ஜி.எஸ்.சமீரன் ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
ஈரோடு மாநகராட்சியின் துணை ஆணையர் சிவ கிருஷ்ணமுர்த்தி ஐ.ஏ.எஸ் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
புவியியல் மற்றும் சுரங்கத்துறை ஆணையர் பூஜா குல்கர்னி ஐ.ஏ.எஸ், தமிழ்நாடு உட்கட்டமைப்பு மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். நிதித்துறையின் சிறப்பு செயலாளராகவும், பூஜா குல்கர்னி செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்து உள்ளது.
சேலம் கூடுதல் ஆட்சியர் அலர்மேல் மங்கை ஐஏஸ், தமிழ்நாடு வழிகாட்டுதல் அமைப்பின் செயல் இயக்குநராக நியமனம்.
சேகார்வ் அமைப்பின் மேலாண் இயக்குநரான லலிதடியா நீலம் ஐ.ஏ.எஸ், சேலம் துணை ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இடமாற்றம்
நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று முடிந்து உள்ள நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்தை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு உள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிவுற்ற நிலையில், மார்ச் மாதம் தொடங்கி ஜூன் முதல் வாரம் வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்து வந்தது. இந்த நிலையில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இடமாற்றத்தை தமிழ்நாடு அரசு செய்து உள்ளது.