Rain Damage: '328 குளங்களில் உடைப்பினை சரிசெய்யமுயற்சிக்கிறோம்’- தலைமைச்செயலர் சிவ்தாஸ் மீனா
நெல்லை மாவட்டத்தில் மழை வெள்ளப்பாதிப்புகளையும் சேதத்தையும் பார்வையிட்ட பின் சிவ்தாஸ் மீனா பேட்டியளித்துள்ளார்.
நெல்லை மாவட்டத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா ஆய்வு செய்தார். குறிப்பாக, நெல்லை சிவந்திப்பட்டியில் வெள்ளப் பாதிப்பை ஆய்வு செய்த பின், தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டியளித்தார்.
அதில், ‘மொத்தமாக மழைப்பாதிப்பின் காரணமாக 780 குளங்களில் உடைப்புள்ளது. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்த கனழையால் மொத்தம் 328 குளங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதைச் சரிசெய்ய, நமது அரசுப்பணியாளர்கள் சீரமைக்க வேலை செய்துகொண்டு வருகிறார்கள். மணிமுத்தாறு அணை நிரம்பியுள்ளது.
எனவே, உடனடியாக இந்த குளங்களை சரிசெய்து, அதில் நீர் நிரப்ப ஏற்பாடுகள் செய்துவருகிறோம். இதனை போர்க்கால அடிப்படையில் செய்துகொண்டு வருகிறோம்.
போக்குவரத்து சரிசெய்யப்படாத இடங்களில் மாற்று ஏற்பாடு செய்யப்படும். மேலும் போக்குவரத்தினை சரிசெய்வதற்குண்டான சாலைப் பணிகளையும் செய்வோம்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 22, திருநெல்வேலியில் இதுவரை 13 பேர் என 35 பேர் வரை இறந்துள்ளனர். இன்னும் கணக்கெடுப்பு முடியவில்லை.
முதலமைச்சர் கடந்த 21ஆம்தேதி நெல்லை வந்தபோது பயிர்ச்சேதம், கால்நடை இறப்பு, வீட்டின் சேதம் ஆகியவற்றுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்கள். எனவே, அதற்கான கணக்கெடுப்பு விவரங்கள், எடுக்கும்பணி நடைபெற்று வருகிறது. அதனுடன் சேர்ந்து இதற்குண்டான தகவலையும் பெற்று, அதன்பின் அதற்கு உரிய நிவாரணம் தரப்படும்.
வணிகர்கள் பாதித்து இருந்தால், அவர்களுடனும் அரசுடனும் கலந்துபேசி உதவி செய்யப்படும். அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு, காப்பீடு மூலமோ அல்லது பிற மூலங்களின்மூலமோ உதவிபெற்று, எவ்வளவு அதிகபட்சமாக உதவி செய்யமுடியுமோ அந்த உதவி மக்களுக்கு வழங்கப்படும்.
மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது, கேரள மாநிலத்தில் இருந்து உதவிசெய்யமுன்வந்துள்ளார்கள். கேரள மாநிலத்தில் இருந்து வந்த 11 தொழில் நுட்ப அறிவுபெற்றவர்கள், தமிழ்நாட்டின் நீர் சார்ந்த பிரச்னைகளுக்கு, நமது பொறியாளர்களுடன் இணைந்து பணியாற்றிவருகின்றனர்.
வானிலை பற்றி நிறையபேசியுள்ளோம். இப்போதைக்கு மக்களின் தேவைகளை அறிந்து செயலாற்றி வருகிறோம். உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலைத்துறைகளில் ஏராளமான பாதிப்புகள் உள்ளன.அதைச் சரிசெய்யும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளோம்’ என்றார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்