தமிழ் செய்திகள்  /  வீடியோ கேலரி  /  திமுக முப்பெரும் விழா இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? - அமைச்சர் முத்துசாமி சொன்ன தகவல்!

திமுக முப்பெரும் விழா இடமாற்றம் செய்யப்பட்டது ஏன்? - அமைச்சர் முத்துசாமி சொன்ன தகவல்!

Jun 10, 2024 10:18 PM IST Karthikeyan S
Jun 10, 2024 10:18 PM IST
  • திமுக முப்பெரும் விழாவுக்கான அரங்கம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்திய அளவில் இந்தியா கூட்டணி அமைய முதல்வர் மு.க. ஸ்டாலின் பெரும் முன்னெடுப்பு எடுத்துள்ளார். இதன் விளைவாகவே பாஜக அதிக பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி பலத்துடன் ஆட்சி அமைக்கும் நிலை ஏற்பட்டது. கொங்கு மண்டலம் அதிமுக கோட்டை என அவர்கள் சொல்லி வந்தது தகர்க்கப்பட்டுள்ளது. மேற்கு மண்டலம் முழுவதும் திமுக கையில் இருப்பதை கோவை மக்கள் நிரூபித்துள்ளனர். உள்ளாட்சி தேர்தலிலும், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலிலும், மக்கள் திமுகவுக்கு ஆதரவு கொடுத்து மாபெரும் வெற்றி அடைய செய்தது இதற்கு உதாரணம். தமிழக மக்களுக்கும், கொங்கு மக்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொடிசியா மைதானத்தில் நடைபெறும் முப்பெரும் விழாவில், லட்சக்கணக்கில் மக்கள் திரள்வார்கள். போக்குவரத்து நெரிசல் இல்லாமல், வாகனங்களை சீராக நிறுத்தும் வகையிலும், முப்பெரும் விழாவிற்கு வரும் மக்களை ஒருங்கிணைக்கும் வகையிலும், தொண்டர்கள் செயல்படுவார்கள்.
More