பதற்றத்தில் தமிழக தலைமைச் செயலகம் .. திடீரென அலறியடித்து வெளியேறிய ஊழியர்கள்.. அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு
Oct 24, 2024, 01:03 PM IST
தலைமை செயலகத்தின் முதல் தளத்தின் தரையில் டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால் அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் கட்டடத்தில் திடீர் அதிர்வு ஏற்பட்டது. இதனால் பணியில் இருந்த ஊழியர்கள் பதறியடித்து வெளியேறியதால் பதற்றமான சூழல் நிலவியது. இதைத்தொடர்ந்து ஆய்வு செய்த தீயணைப்பு துறையினர் முதல் தளத்தின் தரையில் போடப்பட்ட டைல்ஸில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பதை உறுதி செய்தனர். இதனால் அச்சமின்றி உள்ளே செல்லுமாறு ஊழியர்களை காவல்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர் என்ற முதல் கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. இதைத்தொடர்ந்து பொதுப்பணித்துறை அமைச்சர் அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
தலைமை செயலகத்தில் பதற்றம்
சென்னையில் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் தமிழக அரசின் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலையில் வழக்கம் போல் ஊழியர்கள் பணியில் இருந்தனர். எதிர்பாராத விதமாக திடீரென நாமக்கல் கவிஞர் மாளிகை கட்டிடத்தில் முதல் தளத்தில் இருந்த தரையில் விரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் தலைமைச் செயலகத்தில் லேசான அதிர்வு ஏற்பட்டதாகவும் இதன் காரணமாக கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டதாகவும் தகவல்கள் பரவத் தொடங்கின.
இதை அடுத்து நாமக்கல் கவிஞர் மாளிகையில் பணியில் இருந்த ஊழியர்கள் அலறி எடுத்து வெளியேறினார். இதனால் தலைமைச் செயலக வளாகத்தில் பதட்டமான சூழல் ஏற்பட்டது. இந்நிலையில் ஊழியர்களிடம் நில அதிர்வு எதுவும் இல்லை. அது வெறும் வதந்தி. முதல் தளத்தில் உள்ள டைல்சில் வெறும் Air Crack மட்டுமே ஏற்பட்டுள்ளது. வேறு எந்த பிரச்சினையும் இல்லை. உள்ளே செல்லுங்கள் என போலீசார் வலியுறுத்தினர். இதையடுத்து ஊழியர்கள் அலுவகத்திற்குள் சென்றனர்.
அமைச்சர் ஆய்வு
இதைத்தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு தலைமைச்செயலகத்தின் முதல் தளத்தில் விரிசல் ஏற்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் எ.வ. வேலு, 'பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, சென்னை தலைமைச் செயலகத்தில் நாமக்கல் கவிஞர் மாளிகை கடந்த 1974 ஆம் ஆண்டு கட்டப்பட்டு தொடங்கப்பட்ட ஒரு மாளிகை. இதில் தான் தலைமை செயலகத்தின் முழு அலுவலகங்களும் இருக்கிறது. இதில் முதல் தளத்தில் விவசாயத்துறை செயல்பட்டு வருகிறது. திடீரென விரிசல் ஏற்பட்டது என்ற ஒரு பீதி அலுவலகத்தில் ஏற்பட்டதன் அடிப்படையில் அலுவலகத்தில் பணியாற்றிய அனைவரும் கீழ் தளத்திற்கு வந்து விட்டனர். அலுவலகத்தில் இருந்த எனக்கு தகவல் தெரிந்த உடனே பொறியாளர்களை வைத்து பார்த்தோம். கட்டிடத்தின் உறுதி தன்மை எந்த காரணத்தை கொண்டு உறு குலையவில்லை. அது உறுதியாகவே இருக்கிறது.
இந்த அலுவலகத்தின் தரையில் போடப்பட்டிருந்த டைல்ஸ் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்னர் போடப்பட்டது. இது சாதாரணமாக ஏற்பட்டிருக்கும் விரிசல் தான். இதை சரி செய்ய பொதுப்பணித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை அதிகாரிகளும் நாங்களும் கட்டிடத்தில் உறுதித் தன்மையை ஆய்வு செய்தோம். கட்டிடம் உறுதியாக தான் உள்ளது. அதனால் ஊழியர்கள் அச்சப்படத் தேவையில்லை. அனைவரும் பணிக்கு திரும்பலாம் என்றார். உடனடியாக புதிய டைல்ஸ் போடப்படும். எந்த வித அஞ்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை" என்று தெரிவித்துளார்.
டாபிக்ஸ்