Minister M. Subramanian : ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பதை போல ஓமந்துரார் மருத்துவமனை சட்டபேரவையாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஓமந்தூரார் மருத்துவமனை ஒருபோதும் தலைமைச்செயலகமாக மாற்றப்படாது மருத்துவ தேவை அதிகரித்து வரும் நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
எனவே ஓமந்தூரார் மருத்துவமனை எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைப்பதை போல ஓமந்துரார் மருத்துவமனை சட்டபேரவையாக மாறாது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கிண்டி அரசு மருத்துவமனையில் ரூ.8.72கோடி மதிப்புள்ள நவீன டெஸ்லா ஸ்கேன் இயந்திரத்தை திறந்து வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”500க்கு மேற்பட்ட முறை இந்த பதிலை கூறிவிட்டேன். ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறாது.
டெங்குவால் எந்த பாதிப்பும் இல்லை. இறப்பும் இல்லை. கடந்த ஆட்சியில் நிலத்தடி நீர் இல்லாத பகுதியில் மருத்துவமனைகள் கட்டப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனை பன்னோக்கு மருத்துவமனையாகவே இயங்கும்.
அதிமுக நிர்வாகியின் நில மதிப்பை கூட்ட, திட்டமில்லாமல் மருத்துவமனை கட்டியுள்ளனர். தற்போது திறப்பதற்கு ஆர்ப்பாட்டம் செய்வது மக்களை ஏமாற்றும் செயல்” என தெரிவித்தார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
டாபிக்ஸ்