தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Special Pooja Held At Shirdi Sri Sai Baba Temple In Vilathikulam

Saibaba Temple: விளாத்திகுளம் சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம்

Karthikeyan S HT Tamil

Sep 09, 2022, 02:55 PM IST

விளாத்திகுளம் சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.
விளாத்திகுளம் சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

விளாத்திகுளம் சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயில் வருஷாபிஷேகம் நடைபெற்றது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் உள்ள சீரடி ஸ்ரீ சாய்பாபா கோயிலில் வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

Nirmala Devi Case: ’மாணவிகளை அந்த விஷயத்துக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி!’

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..தங்கம் விலை சற்று குறைவு!

EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மதுரை சாலையில் சீரடி ஸ்ரீ சாய் பாபா கோயில் உள்ளது. இத்திருக்கோயிலின் 9ஆம் அண்டு வருஷாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு அதிகாலையிலேயே கோயிலின் நடை திறக்கப்பட்டு காலை 6 மணிக்கு காலை ஆரத்தியுடன் வருஷாபிஷேக விழா தொடங்கியது.

இதனைத்தொடர்ந்து கூட்டுப் பிரார்த்தனை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. பின்னர் காலை 11 மணியளவில் பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு அலங்கார தீபாராதனை காட்டப்பட்டது.

வருஷாபிஷேகத்தை முன்னிட்டு மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு சாய்பாபவிற்கு வருஷாபிஷேகப் பூஜைகள் மற்றும் தீபாரதனை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

<p>வருஷாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்கள்.</p>

இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வருஷாபிஷேகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.

 

டாபிக்ஸ்