தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Savukku Shankar: ‘செப்டம்பரில் அரசியல் கட்சி தொடங்கும் சவுக்கு சங்கர்! கட்சி கொள்கையை அறிவித்தார்!’

Savukku Shankar: ‘செப்டம்பரில் அரசியல் கட்சி தொடங்கும் சவுக்கு சங்கர்! கட்சி கொள்கையை அறிவித்தார்!’

Kathiravan V HT Tamil

Apr 23, 2024, 03:59 PM IST

google News
”சித்தாந்தங்கள் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா காலக்கட்டங்களுக்கும் பொறுந்தக்கூடிய ஒரே சித்தாந்தம் இருக்க முடியாது. இடதுசாரிகளின் வீழ்ச்சியில் இருந்து இதனை புரிந்து கொள்ளலாம்”
”சித்தாந்தங்கள் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா காலக்கட்டங்களுக்கும் பொறுந்தக்கூடிய ஒரே சித்தாந்தம் இருக்க முடியாது. இடதுசாரிகளின் வீழ்ச்சியில் இருந்து இதனை புரிந்து கொள்ளலாம்”

”சித்தாந்தங்கள் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா காலக்கட்டங்களுக்கும் பொறுந்தக்கூடிய ஒரே சித்தாந்தம் இருக்க முடியாது. இடதுசாரிகளின் வீழ்ச்சியில் இருந்து இதனை புரிந்து கொள்ளலாம்”

வரும் செப்டம்பரில் அரசியல் கட்சித் தொடங்குவதாக மூத்த பத்திரிக்கையாளர் சவுக்கு சங்கர் அறிவித்துள்ள நிலையில் கட்சி தொடங்குவது குறித்து தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்து உள்ளார். 

அப்போது பேசிய அவர், தமிழகம் முழுவதும் தேர்தலுக்காக பல இடங்களில் சுற்றியதில் இன்னும் இந்த மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதற்கான தேவை இன்னும் இருப்பதாக பார்க்கிறேன். சுதந்திரம் வாங்கி 75 வருடங்களை கடந்த பின்னும் அங்கு தெரு விளக்குகள் இல்லை. 

இத்தனை ஆண்டு காலம் பத்திரிக்கையாளராக செய்து கொண்டு இருக்கும் இந்த பணியை, அதிகாரம் கையில் கிடைத்தால் இன்னும் விரிவாக செய்யலாம்.  இது குறித்த தகவல்களை பிறகு வெளியில் சொல்ல உள்ளேன். கட்சி தொடங்குவது குறித்து நிறைய ஆலோசனைகளை நடத்தி வருகிறோம். 

நான் அடுத்த கட்டத்திற்கு பயணிக்க வேண்டும் என்ற முடிவை எடுத்து உள்ளேன். கடலூர் சிறையில் இருந்து வந்த உடனேயே உதயநிதிக்கு எதிராக போட்டியிட போகிறேன் என கூறினேன். 

என்னுடைய நலன் விரும்பிகள் ஏதாவது செய்யுங்கள் என்று கூறுகிறார்கள், வெறும் திரை பிரபலத்தை மட்டும் வைத்துக் கொண்டு நான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக வேண்டும் என நினைக்கிறார்கள். ஆனால் அரவிந்த் கெஜ்ரிவாலால் முடிந்தது ஏன் முடியாது என்ற கேள்வி எனக்கு உள்ளது. 

களத்தில் சென்று பார்க்கும் போது தீர்க்கப்படாத ஏராளமான விஷயங்கள் உள்ளது. 4 ஊர்களில் மக்கள் தேர்தலை புறக்கணித்து உள்ளனர். பரந்தூர் மக்கள் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர். அரசியல் கட்சிகள் இந்த மக்களை ஆதரவு தெரிவிக்கவில்லை. 

ஏரி பாசனத்திற்கு திட்டமிட்டு மூன்று போகமும் நெல் விளையக்கூடிய பூமி மீது ஏர் போர்ட்டை கட்ட உள்ளனர். அதிமுகவை கூட இந்த விஷயத்தில் குறை சொல்லித்தான் ஆக வேண்டும். 

போக்குவரத்து தொழிலாளர்களுக்காக இருக்கும் சிஐடியூ, சிபிஎம் ஆகியவை அவர்களின் கோரிக்கைகளை கைவிட்டுவிட்டனர். எனக்கு மக்கள் பிரச்னையை புரிந்து கொள்ளும் அளவுக்கு பக்குவம் உள்ளது என நான் நம்புகிறேன். 

மக்கள் பிரச்னைகள் மீது அரசியல் கட்சிகளையே கவனம் செலுத்த வைக்க இந்த அமைப்பு உதவும். பரந்தூர் பிரச்னையை எந்த அரசியல் கட்சிகளும் கண்டுக்கொள்ளவில்லை. 

சித்தாந்தங்கள் அவசியம் இல்லை என்று நான் நினைக்கிறேன். எல்லா காலக்கட்டங்களுக்கும் பொறுந்தக்கூடிய ஒரே சித்தாந்தம் இருக்க முடியாது. இடதுசாரிகளின் வீழ்ச்சியில் இருந்து இதனை புரிந்து கொள்ளலாம். 

அப்படி இருக்கும்போது எந்த இசங்களிலும் சென்று மாட்டிக்கொள்ளாமல், மக்கள் பிரச்னைகளை தீர்ப்பதுதான் ஒரே சித்தாந்தம். 

ஒரே நிலைப்பாடோடு, ஒரே சிந்தனையின் அடிப்படையில் எப்போதும் இருக்க முடியாது, வெகுஜன மக்களுக்கு எது நல்லதோ அதுதான் சித்தாந்தம்.  

பாரம்பரிய முறையில் அரசியல் பிரச்சாரம் செய்வதற்கு நிறைய பணம் தேவை. ஆம் ஆத்மி கட்சியை பொறுத்தவரை டெல்லியில் இருந்த வரை சரியாக இருந்தார்கள். பஞ்சாப், கோவா வரை அவர்கள் கட்சியை விரிவாக்கம் செய்ய நினைத்தார்கள். இந்த மது கொள்கை வழக்கிற்கே இதுதான் காரணம். 

சமூகவலைத்தளங்களில் நமக்கு நெட் ஒர்க் உள்ளது. இதன் மூலம் அரசியல் சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். 

ஒத்த ரூபாய் தராமல் நான் ஜெயித்து காட்டுகிறேன் என அண்ணாமலை சொல்வது முழுப்பொய், பணம் செலவு செய்யவில்லை என்றால் உங்கள் கட்சிக்காரணே கூட வரமாட்டான். 

ஆம் ஆத்மி கட்சி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வென்ற மாடலை இங்கு செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன் என சவுக்கு சங்கர் கூறினார். 

டாபிக்ஸ்

அடுத்த செய்தி