Udhayanidhi Stalin: ‘உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்’ வாக்குபதிவு முடிந்த நேரத்தில் காங்கிரஸ் முதல்வர் தடாலடி
Udhayanidhi Stalin: மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி, கூறியதாவது, “ சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Udhayanidhi Stalin: தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தவறானது சனாதனம் குறித்த கருத்துக்காக உதயநிதி நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் வாக்குபதிவு முடிந்த நேரத்தில் தெலுங்கான மாநில காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி தடாலடியாக கருத்து தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நாடாளுமன்றத் தேர்தல்கள் ஏழு கட்டமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக முதல் கட்டமாக தமிழகத்தில் நேற்று வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது.
இந்நிலையில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர். உதயநிதி ஸ்டாலின். இவர் சனாதனம் குறித்து பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்த நிலையில் தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டிருந்த ரேவந்த் ரெட்டி, கூறியதாவது, “ சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் கருத்து மிகவும் தவறானது அது அவருடைய சிந்தனை. சனாதன தர்மம் குறித்து அவர் கூறிய கருத்துக்கு நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும்” என தெரிவித்தார்.