தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Rss Rally: ஆர். எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - சீமான் வரவேற்பு

RSS rally: ஆர். எஸ். எஸ். பேரணிக்கு அனுமதி மறுப்பு - சீமான் வரவேற்பு

Karthikeyan S HT Tamil

Sep 29, 2022, 04:56 PM IST

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளாா்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளாா்.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வரவேற்றுள்ளாா்.

சென்னை: ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

தமிழகம் முழுவதும் அக்டோபா் 2ஆம் தேதி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பு திட்டமிட்டது. இதற்கு அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அணிவகுப்பு ஊர்வலம் மேற்கொள்ள நிபந்தனைகளுடன் அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், பல்வேறு சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் காரணமாக ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு தமிழக அரசு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "மக்கள் மனதில் மதவெறியைத் தூண்டி, தமிழ்நாட்டை கலவர பூமியாக மாற்ற திட்டமிட்டிருந்த ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் பேரணிக்கு அனுமதி மறுத்துள்ள தமிழக அரசின் முடிவை வரவேற்கின்றேன். சரியான நேரத்தில் மிகச் சரியாக முடிவெடுத்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும், காவல் துறை அதிகாரிகளுக்கும் வாழ்த்துகளும், நன்றியும்.

 

இதே நிலைப்பாட்டில் உறுதியாக நின்று, ஆர்எஸ்எஸ் பேரணிக்கான தடையை நீதிமன்றத்திலும் உறுதி செய்ய, வலிமையான சட்டப் போராட்டம் செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்வதோடு, இம்முடிவுக்கு ஆதரவாக தமிழக அரசுக்குத் துணைநிற்போமென உறுதியளிக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

டாபிக்ஸ்