தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  மணல் கடத்தல் வழக்கு: ஆட்சியர் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

மணல் கடத்தல் வழக்கு: ஆட்சியர் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு!

Mar 22, 2023, 02:09 PM IST

Sand Smuggling Case: கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் சாலை ஆய்வின் போது ரூபாய் 5000 லஞ்சம் தர மறுத்ததால் 3 யூனிட் எம்.சாண்ட் லாரியில் கடத்தியதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வழக்கில் லாரியை பறிமுதல் செய்தனர் மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.

லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் புதுக்கோட்டைமாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

சிவகங்கை மாவட்டம், காளையார் கோயில் பகுதியைச் சேர்ந்த கந்தசாமி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் சொந்தமாக டிப்பர் லாரி வைத்துள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் 19ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் சாலை ஆய்வின் போது ரூபாய் 5000 லஞ்சம் தர மறுத்ததால் 3 யூனிட் எம்.சாண்ட் லாரியில் கடத்தியதாக சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் வழக்கில் லாரியை பறிமுதல் செய்தனர் மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர்.

லாரியில் முறையாக அனுமதி பெற்று எம்.சாண்ட் மணலை சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்று வரும் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வேலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. லஞ்சம் வழங்க மறுத்ததால் முறையாக ஆவணங்கள் இல்லை எனக் கூறி புதுக்கோட்டை திருமயம் தாசில்தார் ஆய்வு செய்து மணலையும், லாரியையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் ஓட்டுநரை தாக்கியுள்ளனர். இதனால், ஓட்டுநர் மிகவும் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

கிழமை நீதிமன்றத்தில் ஓட்டுநருக்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும் பறிமுதல் செய்யப்பட்ட லாரியை திரும்ப பெறும்போது லாரி மிகவும் சேதம் அடைந்த நிலையில் இருந்தது லாரியை சரி செய்ய ரூ 1.5 லட்சம் செலவு செய்துள்ளேன். எனவே, லஞ்சம் வழங்க மறுத்ததால் மணல் கடத்தல் வழக்கு பதிவு செய்த புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாசில்தார் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மனுதாரர் மனுவை புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலனை செய்ய உத்தரவிட்டார்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்