தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Chennai : அதிக வட்டி ஆசை காட்டி.. ரூ.161 கோடி மோசடி.. கணவன்-மனைவி அதிரடி கைது!

Chennai : அதிக வட்டி ஆசை காட்டி.. ரூ.161 கோடி மோசடி.. கணவன்-மனைவி அதிரடி கைது!

Divya Sekar HT Tamil

Mar 21, 2023, 07:55 AM IST

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் அதிக வட்டி ஆசை காட்டி மேலும் ஒரு நிதி நிறுவனம் 3 ஆயிரம் பேரிடம் ரூ.161 கோடி மோசடி செய்த வழக்கில் கணவன்-மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ஏற்கனவே ஆருத்ராஹோல்டு நிறுவனம், ஹிஜாவு அசோசியேட்ஸ் போன்ற மோசடி நிதி நிறுவ னங்கள் 10 ஆயிரம் கோடிக்கு மேல் பொதுமக்கள் முதலீட் டுத்தொகையை பெற்று மோசடி வழக்கில் சிக்கி உள்ளன. இந்தநிலையில் சென்னை கோடம்பாக்கத்தில் செயல்படும் ஆம்ரோ கிங்ஸ் என்ற நிறுவனமும் மோசடி வழக்கில் சிக்கி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

ரூ.1லட்சம் முதலீடுசெய்தால் மாதம் 10 சதவீதம் லாபத்தில் பங்கு தரப்படும் என்றும் 22 மாதங்களில் முதலீட்டுத் தொகை திருப்பித்தரப்படும், என்றும் அறிவிப்பு வெளியிட்டனர். அதை நம்பி 3 ஆயிரம் பேர் முதலீட்டுத்தொகையை கட்டினார்கள். ரூ.161 கோடியை சுருட்டிய ஆம்ரோ கிங்ஸ் நிறுவனத்தினர் மீது அசோக்நகரைச்

சேர்ந்த சாந்தகுமார் உள்ளிட்ட 3 ஆயிரம் பேர் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார்களை குவித்தனர். ஐ.ஜி. ஆசியம் மாள் உத்தரவின்பேரில், சூப்பிரண்டு மகேஸ்வரன் மேற்பார்வையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

ஆம்ரோ நிறுவனத்தின் தலைவர் மற்றும்மேலாண்மை இயக்குனரான ராஜராஜன், இயக்குனரான அவரது மனைவி முத்துலட்சுமி மற்றும் அவர்களது உறவினர் மறைமலைநகரைச் சேர்ந்த ரஞ்சித்குமார் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களது வீடு, அலுவலகங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி நகைகளை பறிமுதல் செய்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்