தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Rameswaram Temple Agama Rules Issue-requests Accepted Or Not

Rameswaram: ராமேஸ்வரம் கோயில் ஆகம விதிகள் விவகாரம்-கோரிக்கைகள் ஏற்பா?

Manigandan K T HT Tamil

Jan 29, 2023, 06:44 AM IST

Ramanathaswamy Temple: ‘இவையெல்லாம் நமக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. இவை நாளையும் கண்காணிக்கப்பட்டு, மீண்டும் இராமேஸ்வரம் மக்கள் நல பேரவை உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’

'ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் ராஜ கோபுரத்தின் வழியே சென்று சாமி தரிசனம் செய்வது பெருமை மிகு ஆகம மரபாகும், அந்த மரபுகளையெல்லாம் மீறி கிழக்கு ராஜ கோபுரவாசல் வழியை அடைத்து, பக்தர்களை மாற்று வழியில் அனுப்புகிறார்கள்’ என்று ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை போராட்ட குழு நிர்வாகி சி.ஆர்.செந்தில்வேல் குற்றம்சாட்டியிருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ’உஷாரா இருங்க! அடுத்த மூன்று நாட்களுக்கு வெப்ப அலை வீசும்’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

இந்நிலையில், இதுதொடர்பாக மக்கள் பாதுகாப்புப் பேரவை போராட்ட குழுவுடன் அவர் ஆலோசனை நடத்திவிட்டு ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ராமேஸ்வரம் திருக்கோவில் துணை ஆணையாளர் தொடர்ந்து ஆகம விதிகளுக்கு முரணக செயல்பட்டத்தை தொடர்ந்து ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் பொது வேலை நிறுத்தம் அறிவிக்கபட்டது.

இதனை தொடர்ந்து இன்று அரசின் சார்பில் சமாதான கூட்டம் நடை பெற்றது. கூட்டத்தில் ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் ராமநாதபுரம் கோட்டாச்சியார், ராமேஸ்வரம் காவல் துறை துணை கண்காணிப்பளர், ராமேஸ்வரம் நகராட்சி சேர்மேன் K.E.நாசர்கான், ராமேஸ்வரம் தாசில்தார் ஆகியோர் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நாங்கள் வைத்த அனைத்து கோரிக்கையும் ஏற்று கொள்ளப்பட்டது.

கிழக்கு கோபுரம் வழியே மீண்டும் அனைவருக்கும் தரிசனம்.

உள்ளூர் மக்கள் தடையில்லாமல் தரிசனம். 

கோயிலில் தேவையில்லாத தடுப்புகள் அகற்றப்பட்டது.

பிரகாரங்கள் சுற்றிவர தடையாக இருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது.

இவையெல்லாம் நமக்கு கிடைத்த முதல்கட்ட வெற்றி. இவை நாளையும் கண்காணிக்கப்பட்டு, மீண்டும் இராமேஸ்வரம் மக்கள் நல பேரவை உறுப்பினர்கள் கூடி ஆலோசனை நடத்தப்பட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று C. R.செந்தில்வேல் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்