தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Ramadoss Tweet About Liquor Sale

Liquor sale : மது விற்பனை அதிகரித்திருப்பது சாதனையல்ல.... அவமானம்! - ராமதாஸ்

Divya Sekar HT Tamil

Oct 24, 2022, 04:43 PM IST

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை : தீபாவளிக்கு கடந்த ஆண்டை விட மது விற்பனை அதிகரித்திருப்பது எந்தவகையிலும் சாதனையல்ல அவமானம் என பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ட்ரெண்டிங் செய்திகள்

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

Nirmala Devi Case: ’மாணவிகளை அந்த விஷயத்துக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி!’

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “தமிழ்நாட்டில் தீப ஒளி திருநாளுக்கு முந்தைய நாளான நேற்று ஒரே நாளில் ரூ. 259 கோடிக்கு மது விற்பனையாகியிருக்கிறது. தீப ஒளி நாளான இன்று ரூ.300 கோடிக்கும் கூடுதலாக மது விற்பனை செய்யப்படக்கூடும் என்று டாஸ்மாக் தொழிற்சங்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன!

கடந்த ஆண்டு தீபஒளி திருநாளுக்கு முதல் நாளில் ரூ.205 கோடிக்கும், தீப ஒளி நாளில் ரூ. 225 கோடிக்கும் மது விற்பனையான நிலையில், அதை விட இந்த ஆண்டு அதிகமாக மது விற்பனையாகியிருக்கிறது. மது விற்பனை அதிகரித்திருப்பது எந்த வகையிலும் சாதனையல்ல.... அவமானம்!

இரு நாட்களில் மதுவுக்காக செலவிடப்பட்ட சுமார் ரூ.600 கோடி ஆக்கப்பூர்வமாக செலவிடப்பட்டிருந்தால், லட்சக்கணக்கான ஏழைக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு புத்தாடைகளும், இனிப்புகளும் கிடைத்திருக்கும். லட்சக்கணக்கான குடும்பங்களின் மகிழ்ச்சியை மது பறித்திருப்பது வேதனையானது!

தீப ஒளி, பொங்கல் போன்ற திருவிழாக்கள் மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டுமானால் அந்த காலத்தில் மதுக்கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும். அடுத்தக்கட்டமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகளை நிரந்தரமாக மூடி மது விலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும்!” என தெரிவித்துள்ளார்.

டாபிக்ஸ்