தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Police Security Duty Across The City Of Chennai Today Ahead Of The Vinayagar Statue Procession

Ganesha procession: விநாயகர் சிலை ஊர்வலம் -பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார்

Divya Sekar HT Tamil

Sep 04, 2022, 09:40 AM IST

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.

விநாயகர் சதுர்த்தியையொட்டி கடந்த மாதம் 31ஆம் தேதி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பூஜைக்காக வைக்கப்பட்டன. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 3 ஆயிரம் விநாயகர் சிலைகள் நிறுவப்பட்டு தினமும் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிலைகளை இன்று (செப் 04) ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

Nirmala Devi Case: ’மாணவிகளை அந்த விஷயத்துக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி!’

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் நகைப்பிரியர்களுக்கு ஒரு குட் நியூஸ்..தங்கம் விலை சற்று குறைவு!

EVM Machine: ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் CCTV கேமரா திடீர் பழுது.. மாவட்ட எஸ்பி சொல்வதென்ன?

தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் சென்று கடலில் கரைக்கப்படுகின்றன. 

விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் கடற்கரை பகுதி, காசிமேடு, நீலாங்கரை பல்கலை நகர், திருவொற்றியூர் பாப்புலர் எடை மேடை கடலோர பகுதி ஆகிய 4 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையொட்டி சென்னை மாநகர் முழுவதும் இன்று 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். விநாயகர் சிலைகள் புறப்படும் இடத்தில் இருந்து கடலில் கரைக்கப்படும் இடம் வரையில் போலீசார் உடன் சென்று பாதுகாப்பு அளிக்கின்றனர்.

விநாயகர் சிலை எடுத்துச் செல்லப்படும் வாகனத்துடன் போலீஸ் வாகனம் ஒன்றும் செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பாதைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

டாபிக்ஸ்