தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Powercut : மின்தடைக்கு எதிர்ப்பு.. கையில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்!

Powercut : மின்தடைக்கு எதிர்ப்பு.. கையில் தீப்பந்தம் ஏந்தி மக்கள் போராட்டம்!

Divya Sekar HT Tamil

Mar 28, 2023, 01:36 PM IST

சிவகங்கை அருகே கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிவகங்கை அருகே கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை அருகே கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகங்கை : காரைக்குடி கணேசபுரம் கருணாநிதி நகர் பகுதியில் 1500 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் திடீரென ஒரு பகுதியில் மட்டும் சுமார் 300 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்தடை ஏற்பட்டது. அப்பகுதி பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தொலைபேசியில் புகார் தெரிவித்தனர்.

ட்ரெண்டிங் செய்திகள்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

TN 12th Result 2024: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது..தட்டி தூக்கிய மாணவிகள்..எந்த மாவட்டம் முதலிடம் தெரியுமா?

எதிர்முனையில் பேசிய மின்வாரிய அலுவலர் தற்பொழுது அனைத்து மின் ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்னை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். அதனால் மின்தடையை சரி செய்ய வருவதற்கு ஆள் இல்லை என்று கூறி தொலைபேசி இணைப்பை துண்டித்துள்ளார்.

இரவில் மின்தடையை சரி செய்ய மின்வாரிய ஊழியர்கள் யாரும் வராததால் அப்பகுதி மக்கள் மிகவும் அவதியடைந்து இன்னல்களுக்கு ஆளாகினர். இதனால் அப்பகுதி மக்கள் வசிக்கும் பகுதிகளில் கையில் தீப்பந்தம், மெழுகுவர்த்தி ஏந்தி மின்தடைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்