தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Ops Meets Sabareesan : ’எந்தவித அரசியலும் இல்லை’ சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து ஓபிஎஸ் விளக்கம்!

OPS Meets Sabareesan : ’எந்தவித அரசியலும் இல்லை’ சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து ஓபிஎஸ் விளக்கம்!

Divya Sekar HT Tamil

May 08, 2023, 08:54 PM IST

சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.
சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 6 ஆம் தேதி நடந்த சென்னை-மும்பை அணிகள் மோதிய ஐபிஎல் போட்டியை, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் காண வந்தார். முதலில் கருணாநிதி கேலரியில் அமர்ந்து அவர் போட்டியை ரசிக்கும் போட்டோ வெளியானது. முன்னதாக, ஓ.பன்னீர்செல்வத்துடன் தனது குழந்தைகளை அறிமுகப்படுத்திய சபரீசன் அதன் பிறகு அவருடன் தனிப்பட்ட முறையில் இந்த சந்திப்பை நடத்தி இருக்கிறார்.

ட்ரெண்டிங் செய்திகள்

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனுடன் ஓபிஎஸ் சந்தித்து பேசும் போட்டோக்கள்,வீடியோ வெளியாகின. அதன் பின், ஓபிஸ்யை அதிமுகவினர் கடுமையாக சாடி பதிவுகளை வெளியிடத் தொடங்கினர். ஏன் நடந்தது இந்த சந்திப்பு? என்ன நடந்தது இந்த சந்திப்பில்? என்கிற கேள்விகள் எழுந்தது.

இந்நிலையில் சபரிசனுடன் நடைபெற்ற சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என ஓபிஎஸ் விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்றபோது இருவரும் தற்செயலாக சந்தித்துக் கொண்டோம். சந்திப்பில், எந்தவித அரசியலும் இல்லை என தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஓபிஎஸ் சபரீசனுடன் இருந்த புகைப்படங்களை பகிர்ந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ‘பூனைக்குட்டி வெளியே வந்தது’ என கருத்து தெரிவித்தார். சபரீசனுடன் ஓபிஎஸ் சந்திப்பு எனக் குறிப்பிட்டும் இரண்டாவது புகைப்படத்தில், “ஓபிஎஸ் தற்போது தோனிக்கு பதிலாக தன்னை சென்னை அணிக்கு கேப்டன் ஆக்குமாறு சிஎஸ்கே நிர்வாகத்துடன் போராடிக்கொண்டிருக்கிறார்” என்றும் கூறியுள்ளார். இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சரின் இந்தப் பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

டாபிக்ஸ்