தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

Kathiravan V HT Tamil

May 04, 2024, 01:45 PM IST

”Weather Update: 04.05.2024 முதல் 08.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு”
”Weather Update: 04.05.2024 முதல் 08.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு”

”Weather Update: 04.05.2024 முதல் 08.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு”

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்றைய தினம் (04.05.2024) தமிழகத்தில் சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க
ட்ரெண்டிங் செய்திகள்

தென்காசி, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மிக கனமழை.. கன்னியாகுமரி, திருநெல்வேலி, உள்ளிட்ட 13 மாவட்டங்களில் கனமழை!

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் ரெட்பிக்ஸ் பெலிக்சை துரத்தும் சோகம்!’ சொந்த ஊரில் ரெய்டு செய்யும் போலீஸ்!

Savukku Shankar Case: ’போலீஸ் துன்புறுத்தவில்லை’ சவுக்கு சங்கர் நீதிபதியிடம் பரபரப்பு பதில்! மே 28 வரை காவல் நீட்டிப்பு

Redpix Felix Gerald: ’சவுக்கு சங்கரின் நண்பர் பெலிக்ஸ்க்கு வரும் மே 31 வரை நீதிமன்ற காவல்!’ கோவை நீதிமன்றம் உத்தரவு

05.05.2024 மற்றும் 06.05.2024 தமிழகத்தில் ரில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

07.05.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08.05.2024: தமிழகத்தில் வருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், நீலகிரி, தேனி, திண்டுக்கல், திலப்பூர், விருதுநகர் மாவட்டங்கள், தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலை பகுதிகளில் சரிசு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

09.05.2024 மற்றும் 10.05.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அடுத்த ஐந்து தினங்களக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு

04.05.2024 முதல் 08.05.2024 வரை அடுத்த 3 தினங்களுக்கு தமிழக உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்ப நிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. அதற்கு அடுத்த 2 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.

04.05.2024 முதல் 08.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு, தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

04.05.2024 & 05.05.2024: வட தமிழக உள் மாவட்டங்களில் ஒ ருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3°-5° செல்சியஸ் இயல்பை விட மிக அதிகமாக இருக்ககூடும்.

04.05.2024 முதல் 08.05.2024 வரை; அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் ஒரு சில இடங்களில் 41°-43° செல்சியஸ், இகர தமிழக மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் 39-40° செல்சியஸ், கடலோர தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 36°-38° செல்சியஸ் இயக்கக்கூடும்.

ஈரப்பதம்: 04.05.2024 முதல் 08.05.2024 வரை காற்றின் ஈரப்பதம் தமிழக உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் பிற்பகலில் 30-50% ஆகவும், மற்ற நேரங்களில் 45.80% ஆகவும் மற்றும் கடலோரப்பகுதிகளில் 55-85% ஆகவும் இருக்கக்கூடும்.

வெப்ப அலை பற்றிய முன்னெச்சரிக்கை:

04.05.2024 & 05.05.2024: தமிழக உள் மாவட்டங்களில் ஓரிய இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும். 

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது தமிழக மாவட்டங்கள். புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சரிம இடங்களில் அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் பறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸை எட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிரி செல்சியஸை வட்டியும் இயக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

04.05.2024 முதல் 06.05.2024 வரை தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 இலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி