தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Nellai Quarry Case Madurai High Court Has Ordered The District Collector To Respond

MHC : நெல்லை கல்குவாரி வழக்கு..மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு!

Divya Sekar HT Tamil

Mar 17, 2023, 06:57 AM IST

நெல்லை கல்குவாரி விபத்து வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லை கல்குவாரி விபத்து வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

நெல்லை கல்குவாரி விபத்து வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பொன் காந்திமதிநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளைகள் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், "திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, அடிமிதிப்பான்குளம் கிராமத்தில் தனியார் கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Rain Warning: ’கோடை மழையில் நனைய ரெடியா! இரவு 11.15 வரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை மையம் அறிவிப்பு!

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

இந்த கல்குவாரியில் சட்டத்திற்கு புறம்பாக இரவும், பகலும் வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு எம்.சாண்ட் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த கல்குவாரியில் 2022 மே 14ஆம் தேதி பாறைகளுக்கு வெடிகள் வைக்கும் பொழுது பாறைகள் சரிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்தனர் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

அதிகாரிகள் முறையாக ஆய்வு மேற்கொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, 4 உயிரிழந்த கல்குவாரி விபத்திற்கு காரணமான அதிகாரிகளான பாளையங்கோட்டை தாசில்தார் ஆவுடையப்பன், புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் வினோத், முன்னீர்ப்புள்ளம் காவல் ஆய்வாளர் தில்லை நாகராஜன், கிராம நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவும், அரசாணையை மீறி வெடிபொருள்கள் பயன்படுத்திய தனியார் கல்குவாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து தமிழ்நாடு தொழில் துறை செயலர், தமிழ்நாடு புவியியல் மற்றும் சுரங்கம் துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஏப்ரல் 5ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்