Top 10 News: விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி முதல்! மதுரை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் வரை! இன்றைய டாப் 10 செய்திகள்!
Jun 17, 2024, 07:16 AM IST
Top 10 News: விக்கிரவாண்டி தொகுதியில் மும்முனை போட்டி முதல், மதுரை - பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயிலின் சோதனை ஓட்டம் வரை இன்றைய டாப் 10 செய்திகள் இதோ!
1.ரஷ்யா-உக்ரைன் போர் விவகாரம்
ரஷ்யா - உக்ரைன் போர் தொடர்பாக சுவிட்சர்லாந்தில் நடந்த அமைதி உச்சிமாநாட்டில் தீர்வை எட்டும் உடன்படிக்கையில் கையெழுத்திடாமல் இந்தியா தவிர்த்து உள்ளது. "எங்கள் பார்வையில், இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விருப்பங்கள் மட்டுமே நிலையான அமைதிக்கு வழிவகுக்கும். இந்த அணுகுமுறைக்கு ஏற்ப, கூட்டு அறிக்கை அல்லது இந்த உச்சிமாநாட்டிலிருந்து வெளிவரும் வேறு எந்த ஆவணத்துடனும் இணைவதைத் தவிர்க்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்" என்று இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் பவன் கபூர் கருத்து.
2.அக்னிபத் திட்டம் - பிரதமர் மோடி ஆலோசனை
ராணுவத்தில் இளைஞர்களை தற்காலிகமாக பணியமர்த்தும் அக்னிபத் திட்டத்திற்கு பீகார் முதலமைச்சரும், ஐக்கிய ஜனதாதளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்து உள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று முக்கிய ஆலோசனை நடைபெறுகின்றது.
3.மின்னனு வாக்குப்பதிவு இயந்திர சர்ச்சை
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை 'ஹேக்’ செய்ய முடியும் என்ற டெஸ்லா நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் கருத்துக்கு, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார். ஆனால் இந்தியாவில் உள்ள மின்னனு வாக்குப்பதிவு இயந்திரங்களை ’ஹேக்’ செய்ய முடியாது என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மறுப்பு தெரிவித்து உள்ளார்.
4.நீட் முறைகேடு - முதலமைச்சர் வலியுறுத்தல்
நீட் நுழைவுத் தேர்வில் இரண்டு இடங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறிய நிலையில், நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். நீட் ஒழிப்புப் போராளி மாணவி அனிதா தொடங்கி எண்ணற்ற மாணவர்கள் இத்தேர்வினால் பரிதாபத்துக்குரிய முறையில் தற்கொலை செய்துகொண்டுள்ளதை நாம் பார்த்துவிட்டோம் இனியும் பொறுக்கலாகாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து.
5.தேர்தல் ஆணையம் மீது ஈபிஎஸ் புகார்
தேர்தல் ஆணையம், காவல்துறை, அரசு அதிகாரிகள் மாநில அரசுக்கு துணையாக உள்ளனர். அமைச்சர்கள் முகாமிட்டு, ஆட்சி, அதிகாரத்தை பயன்படுத்தி, பரிசு பொருட்களை கொடுத்தது ஈரோடு கிழக்கில் நடந்தது. எனவே தேர்தல் நியாயமாக நடைபெறாது என்பதால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்பதாக எடப்பாடி பழனிசாமி பேட்டி
6.தேமுதிக இடைத்தேர்தல் புறக்கணிப்பு
தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு.
7.விக்கிரவாண்டியில் மும்முனை போட்டி
வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெற உள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் புறக்கணித்து உள்ள நிலையில், திமுக, பாமக, நாம் தமிழர் கட்சிகளிடையே மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
8.அதிமுகவில் சாதி ஆதிக்கம்
நமது இயக்கத்தில் ஒரு குறிப்பிட்ட சாதி என நினைத்து சாதி அரசியலுக்குள் செல்கின்றனர். நிறைய சாதி அமைப்புகள் தனியாக இயக்கம் நடத்துகின்றனர். அப்படி ஆசைப்பட்டால் அவர்கள் தனியாக சென்று செய்யலாம். ஆனால் அம்மாஅடுவின் இயக்கத்தில் இப்படி செய்வதை யாரும் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள். அதிமுகவில் தனது எண்ட்ரி தொடங்கிவிட்டதாக சசிகலா பேட்டி
9.அயர்லாந்தை வீழ்த்திய பாகிஸ்தான்
அமெரிக்காவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை போட்டியில் அயர்லாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, தொடரில் இருந்து வெளியேறியது. முதலில் விளையாடிய அயர்லந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்களை எடுத்து இருந்தது. அடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
10.வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம்
மதுரை - பெங்களூரு இடையேயான வந்தே பாரத் ரயில் சோதனை ஓட்டம் இன்று நடைபெறுகின்றது
டாபிக்ஸ்