ஓராண்டை கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்: அப்படி என்னஇருக்கிறது நேட்டோவில்!
தமிழ் செய்திகள்  /  தேசம் மற்றும் உலகம்  /  ஓராண்டை கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்: அப்படி என்னஇருக்கிறது நேட்டோவில்!

ஓராண்டை கடந்த ரஷ்யா - உக்ரைன் போர்: அப்படி என்னஇருக்கிறது நேட்டோவில்!

Karthikeyan S HT Tamil
Feb 24, 2023 09:30 AM IST

Russia-Ukraine war: நேட்டோவில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷ்யா தொடங்கிய போர் நடவடிக்கைகள் ஓராண்டை எட்டியுள்ளது.

ரஷ்யா - உக்ரைன் போர்
ரஷ்யா - உக்ரைன் போர் (REUTERS)

இந்த சூழலில் இந்த போர் தொடங்குவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக கருதப்படும் நேட்டோவை பற்றி தெரிந்துகொள்வோம்.

நேட்டோ

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு எனப்படும் (NATO) நேட்டோ சர்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு சோவியத் யூனியனின் அச்சம் காரணமாக 1949-ம் ஆண்டு நேட்டோ அமைப்பு உருவாக்கப்பட்டது. சர்வதேச அளவில் மிகப்பெரிய ராணுவ அமைப்புகளில் ஒன்றாக கருதப்படுகிறது. நேட்டோ ஜனநாயக முறையில் அமைதியை நிலைநாட்டவும், பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகளை தீர்க்கவும், நம்பிக்கையை வளர்க்கவும், மோதலை தடுக்கவும் ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பு வழங்குகிறது.

நேட்டோ என்றால் என்ன?

North Atlantic Treaty Organization என்பதன் சுருக்கமே 'NATO'. 1949-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட 12 நாடுகள் இணைந்து ஒரு ராணுவ கூட்டமைப்பை உருவாக்கியது. இதுதான் நேட்டோ என அழைக்கப்படுகிறது. தற்போது நேட்டோவில் 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸை தலைமையாக கொண்டு செயல்படுகிறது.

நேட்டோவின் செயல்பாடுகள் என்ன?

நேட்டோ கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள உறுப்பு நாடுகளின் சுதந்திரம், பாதுகாப்பு, அரசியல் மற்றும் ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவாதம் அளிப்பதே இதன் நோக்கமாகும். உறுப்பு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்குதலுக்கு உள்ளானால், அது தங்கள் நாடுகளின் மீதான தாக்குதலாக கருதி பதிலடி கொடுப்பது நேட்டோவின் பிரதான கொள்கையாக உள்ளது.

உறுப்பு நாடுகள்

நேட்டோ அமைப்பில் தற்போது 30 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. கடந்த 2020-ல் வடக்கு மேஸ்டோனியா என்ற நாடுதான் கடைசியாக நேட்டோவில் உறுப்பினராக இணைந்தது. நேட்டாவில் உறுப்பினராக உள்ள நாடுகளின் பட்டியலை கீழே காணலாம்

அல்பேனியா (2009)

பெல்ஜியம் (1949)

பல்கேரியா (2004)

கனடா (1949)

க்ரோஸியா (2009)

செக் குடியரசு (1999)

டென்மார்க் (1949)

எஸ்டோனியா (2004)

பிரான்ஸ் (1949)

ஜெர்மனி (1955)

கிரீஸ் (1952)

ஹங்கேரி (1999)

ஐஸ்லாந்து (1949)

இத்தாலி (1949)

லாட்வியா (2004)

லித்துவானியா (2004)

லக்ஸம்போர்க் (1949)

மான்டென்க்ரோ (2017)

நெதர்லாந்து (1949)

வடக்கு மேஸ்டோனியா (2020)

நார்வே (1949)

போலந்து (1999)

போர்ச்சுகல் (1949)

ரோமானியா (2004)

ஸ்லோவாக்கியா (2004)

ஸ்லோவேனியா (2004)

ஸ்பெயின் (1982)

துருக்கி (1952)

இங்கிலாந்து (1949)

யுனைடெட் ஸ்டேட்ஸ் (அமெரிக்கா) (1949)

யாருக்கு கட்டுப்படும் நேட்டோ?

நேட்டோ கூட்டமைப்பு ஒரு உயரிய ராணுவ கமிட்டியின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. அந்த ராணுவ கமிட்டியில் அதன் உறுப்பு நாடுகளின் தலைமை ராணுவ அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த கூட்டமைப்பில் உக்ரைன் இணைய எதிர்ப்பு தெரிவித்து தான் கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி உக்ரைன் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலை தொடங்கியது. இரு நாடுகள் இடையிலான போர் தற்போது ஓராண்டை எட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கியதில் இருந்து இதுவரை டேனெட்ஸ்க், லுஹான்ஸ்க் உள்ளிட்ட 20 சதவீதம் பரப்பளவை ரஷ்யா கைப்பற்றி இருக்கிறது.

Whats_app_banner

டாபிக்ஸ்

தேசிய மற்றும் சர்வதேச சமீபத்திய செய்திகளை எங்கள் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழின் செய்தி தளத்தின் தேசம் மற்றும் உலகம் பிரிவில் காணலாம்.