Vikravandi By-Election: ’விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Vikravandi By-election: ’விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

Vikravandi By-Election: ’விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

Kathiravan V HT Tamil
Jun 16, 2024 03:29 PM IST

Vikravandi By-Election: இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது என பிரேமலதா கூறி உள்ளார்

’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு
’விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறோம்!’ தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி, உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலமானார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக ஏப்ரல் 8 ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.

ஜூலை 10-இல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

இந்த நிலையில் வரும் ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதற்கான வேட்புமனுத்தாக்கல் ஜுன் 14 ஆம் தேதி தொடங்கி ஜூன் 21 ஆம் தேதி வரை வேட்புமனுத்தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

வரும் ஜூன் 24ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும், ஜூன் 26ஆம் தேதி வேட்புமனுக்களை திரும்ப பெறலாம் என்றும் இடைத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 13 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

வேட்பாளர்களை அறிவித்த கட்சிகள்

இதனை அடுத்து விக்கிரவாண்டி தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் அன்னியூர் சிவாவும், பாஜக கூட்டணி சார்பில் பாமகவின் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் மருத்துவர் அபிநயாவும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தலை புறக்கணித்த தேமுதிக

இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள அறிக்கையில், 2024 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது. இதுவரை தமிழகத்தில் நடந்த அனைத்து இடைத்தேர்தல் மற்றும் பொதுத்தேர்தல்களில் போட்டியிட்ட தேமுதிக விக்ரவாண்டி தேர்தலை புறக்கணிக்கிறது.

காரணம் தேர்தல்கள் என்பது ஜனநாயக ரீதியாக நேர்மையாக நடக்கவேண்டிய தேர்தல்கள். இன்றய கால கட்டத்தில் ஆட்சியர்களின் அதிகாரத்தால் தேர்தல்கள் தவறாக நடதப்படுகிறது. இந்த இடைதேர்தல் மீது நம்பிக்கை இல்லாத காரணத்தால் உழைப்பு, நேரம், பணம் அனைத்தும் விரயம் செய்ய விரும்பவில்லை. எங்கள் தொண்டர்களின் உழைப்பை வீணடிக்க விரும்பாத காரணத்தால் தேமுதிக இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை

இன்றய ஆட்சியர்களின் கரங்களில் தேர்தல் என்கின்ற ஜனநாயகம் மிக பெரிய கேள்விக்குறியக்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் நாம் வாழ்கின்றோம் என்று நாம் பெருமையாக சொல்லி கொண்டாலும் ஜனநாயகம் என்பது இன்றக்கு கேள்விக் குறியக்கப்பட்டுள்ளது என்பதை ஒட்டு மொத்த மக்களும், கழகத்தினரும் அறிவர் எனவே இந்த விக்ரவாண்டி இடைத்தேர்தலை தேசிய முற்போக்கு திராவிட கழகம் புறக்கணிக்கிறது என தெரிவித்து உள்ளார்.

ஏற்கெனவே தேர்தலை புறக்கணித்த அதிமுக

இந்த நிலையில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகத்தில் நடந்த ஆலோசனைக்கு பின்னர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “"அராஜகம் என்றால் திமுக; திமுக என்றால் அராஜகம்". திமுக-வினர் வன்முறை மற்றும் அராஜகங்களை நிகழ்த்துவதில் கைதேர்ந்தவர்கள். அவ்வாறாக, கடந்த காலங்களில் பல்வேறு அராஜகங்களை நிகழ்த்தியதன் காரணமாக, 18.8.2009 அன்று நடைபெற்ற இளையான்குடி, கம்பம், தொண்டாமுத்தூர், பர்கூர், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 5 சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலையும்; 27.2.2009 அன்று நடைபெற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத் தேர்தல் உட்பட திமுக ஆட்சியில் நடைபெற்ற இடைத் தேர்தல்களையும் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் புறக்கணித்தார்கள். திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகின்றதோ அப்போதெல்லாம் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்கதையாக நடைபெறுவதை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கின்றார்கள். விடியா அரசின் அமைச்சர்களும், திமுக-வினரும் ஆட்சி அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்துவதோடு, பணபலம், படைபலத்துடன் பல்வேறு அராஜகங்கள் மற்றும் வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவார்கள் என்பதாலும், மக்களை சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள் என்பதாலும், தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெறாது என்பதாலும், 10.7.2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புறக்கணிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என கூறியிருந்தார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.