தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Mhc Dismissed Case Seeking Ban For Erode Byelection

MHC: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை ரத்து செய்ய கோரி மனு - உயர் நீதிமன்றம் தள்ளுபடி

Feb 21, 2023, 06:16 PM IST

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது போன்ற தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்க உத்தரவிடும் வரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலுக்கு தடை விதிக்ககோரி, கோவையை சேர்ந்த மறுமலர்ச்சி மக்கள் இயக்க தலைவர் ஈஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கில் செய்திருந்தார். அதில், " தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க பல்வேறு சட்டங்கள் உள்ளது. இருப்பினும் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பது தொடர்ந்து வருகிறது. இதனை தடுக்க தேர்தல் ஆணையம் போதிய நடவடிக்கை எடுப்பதில்லை.

ட்ரெண்டிங் செய்திகள்

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

Nirmala Devi Case: ’மாணவிகளை அந்த விஷயத்துக்கு அழைத்த பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி!’

ஒவ்வொரு தேர்தலின்போது பணம் கொடுத்து வாக்குகள் வாங்கப்படுகின்றன. இதுபோன்ற தவறுகள் இழைப்பவர்கள் தண்டிக்கப்படுவதில்லை.

தேர்தல் முறைகேடுகள் தொர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், வெளிமாநில ஐஎஸ்எஸ் அலுவலர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இதுதொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அலுவலர்களுக்கு அனுப்பிய மனு மீது எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

எனவே தேர்தல் முறைகேடு தொடர்பான வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் வெளிமாநில ஐஏஎஸ் அலுவலர்கள், அமலாக்கத்துறை, சிபிஐ அலுவலர்கள் கொண்ட குழு அமைக்க உத்தரவிட வேண்டும். அதுவரை ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்தலை நடத்த தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு இதுபோன்ற மற்றொரு வழக்கு இதுதொடர்பான நிவாரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

டாபிக்ஸ்