தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Gokulraj Murder Case: யுவராஜ் மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Gokulraj Murder Case: யுவராஜ் மேல்முறையீடு வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு

Feb 23, 2023, 11:56 PM IST

கோகுல்ராஜ் கொலை வழக்கில், சிறைதண்டனை அனுபவித்து வரும் யுவராஜ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீடு மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்

சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த பொறியியல் மாணவரான கோகுல்ராஜ், வேறொரு சமூகத்தை சேர்ந்த சுவாதி என்ற பெண்ணை காதலித்துள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோயிலுக்கு சுவாதியுடன், கோகுல்ராஜ் சென்றபோது அடையாளம் தெரியாத கும்பல் அவரை கடத்தி கொலை செய்தது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

இந்த கொலை சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் உள்பட 19 பேரை கைது செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை சிறப்பு நீதிமன்றம். யுவராஜ் உள்பட 10 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. இந்த உத்தரவை எதிர்த்து யுவராஜ் உள்பட 10 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கில் முக்கிய சாட்சியான சுவாதி பிறழ் சாட்சியம் அளித்த நிலையில், அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேர் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து கோகுல்ராஜின் தாயார் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது யுவராஜ் தரப்பிலிருந்து, " வழக்கில் கைப்பற்றப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவு உள்பட ஆதாரங்களை சேகரித்ததில் குறைகள் உள்ளன. தனக்கு எதிரான மின்னணு தொடர்பான ஆதாரங்கள் அனைத்து திரிக்கப்பட்டிருக்கலாம். எங்கள் எதிராக சரியான ஆதாரங்கள் எதுவும் இல்லை" என வாதிடப்பட்டது.

இதையடுத்து அரசு தரப்பிலிருந்து, "மிகவும் திட்டமிடப்பட்டு கோகுல்ராஜ் கொலை செய்யப்பட்டுள்ளார். இதை சாட்சியங்களும் உறுதி செய்துள்ளன" என தெரிவிக்கப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.

டாபிக்ஸ்