தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mhc: தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தேர்தல் அலுவலரை நியமிக்க அவகாசம்

MHC: தயாரிப்பாளர் சங்க தேர்தல் - தேர்தல் அலுவலரை நியமிக்க அவகாசம்

Feb 13, 2023, 11:20 PM IST

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலை ரத்து செய்ய கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் அலுவலரை நியமிக்க அவகாசம் வேண்டும் என்ற கோரிக்கை ஏற்று வழக்கு விசாரணை நீதிமன்றம் ஒத்துவைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், துணை தலைவர், செயலாளர், பொருளாளர் உள்பட 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோரை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

இந்த அறிவிக்கை ரத்து செய்யுமாறும், இதற்கு தடை விதித்து உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தேர்தல் அலுவலராக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட கோரி தயாரிப்பாளர் சங்கத்தின் உறுப்பினர்களாக இருக்கும் கமல் குமார், சீனிவாசன் உள்பட 8 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பிலிருந்து, " சங்க விதிகளின்படி தேர்தல் நடத்தும் அலுவலரை நீதிமன்றம்தான் நியமிக்க வேணடுமே தவிர, தேர்தல் அலுவலரை தயாரிப்பாளர் சங்கமே நியமித்து தேர்தல் நடத்த முடியாது" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வாக்காளர் பட்டியல் முறையாக வெளியிடப்படாமல் தேர்தல் அறிவக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை கேட்ட பின்பு நீதிபதிகள், தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடத்தும் அலுவலர் யார் என கேள்வி எழுப்பினர். அப்போது தயாரிப்பாளர் சங்க நிர்வாகம் சார்பில், தேர்தல் நடத்தும் அலுவலராக நியக்க இருப்பவர் குறித்து முடிவு செய்து அறிவிக்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

டாபிக்ஸ்