தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mahalaya Amavasai: மகாளய அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த மக்கள்!

Mahalaya Amavasai: மகாளய அமாவாசை - ராமேஸ்வரத்தில் புனித நீராட குவிந்த மக்கள்!

Divya Sekar HT Tamil

Sep 25, 2022, 12:04 PM IST

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் லட்சக்கணக்கான பொதுமக்கள் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.

புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளான இன்று மறைந்த தங்களது முன்னோர்களுக்கு புனித நீர்நிலைகளில் நீராடி தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்துவது வழக்கம். 

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

விரதம் இருந்து பிதுர்கர்மா பூஜை செய்தால் முன்னார்களின் ஆத்மா சாந்தி அடைவதுடன் அவர்கள் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்றும், அதனால் அவர்கள் அகமகிழ்ந்து தங்களது குடும்பம் சிறப்பாக வாழ வாழ்த்துவர் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.

இந்த நிலையில், புகழ்பெற்ற ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில், மகாளய அமாவாசையை ஓட்டி இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பொதுமக்கள் குடும்பத்துடன் புனித நீராடி, மறைந்த தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுத்து வழிபாடு நடத்தினர்.

தர்ப்பணம் கொடுக்க தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் திரண்டதால் ராமேஸ்வரத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 

இதனால் பக்தர்கள் மற்றும் வியாபாரிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். மகாளய அமாவாசையை ஓட்டி அங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

டாபிக்ஸ்