தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Kallakurichi Hooch Tragedy: ’கள்ளச்சாராயம் வேறு! மெத்தனால் வேறு! ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு’ திமுக Mla-க்கள் பேட்டி!

Kallakurichi hooch Tragedy: ’கள்ளச்சாராயம் வேறு! மெத்தனால் வேறு! ராமதாஸ் மீது மானநஷ்ட வழக்கு’ திமுக MLA-க்கள் பேட்டி!

Kathiravan V HT Tamil

Jun 22, 2024, 11:58 AM IST

google News
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் மருத்துவர் ராமதாஸ், தன் மகன் மீது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? உதயசூரியன் எம்.எல்.ஏ கேள்வி
Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் மருத்துவர் ராமதாஸ், தன் மகன் மீது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? உதயசூரியன் எம்.எல்.ஏ கேள்வி

Kallakurichi Hooch Tragedy: கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் மருத்துவர் ராமதாஸ், தன் மகன் மீது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? உதயசூரியன் எம்.எல்.ஏ கேள்வி

கள்ளக்குறிச்சி கள்ளச்சாரய மரணம் தொடர்பாக தங்கள் மீது அபாண்ட குற்றச்சாட்டை சொல்லும் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மீது மான நஷ்ட வழக்கு தொடர உள்ளதாக திமுக எம்.எல்.ஏக்கள் வசந்தம் கார்த்திகேயன் மற்றும் உதயசூரியன் ஆகியோர் தெரிவித்து உள்ளனர். 

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் உயிரிழந்த நிலையில், சங்கராபுரம் எம்.எல்.ஏ உதயசூரியன், ரிஷிவந்தியம் எம்.எல்.எ வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் சட்டப்பேரவை வளாகத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

வசந்தம் கார்த்திகேயன் பேட்டி 

ரிஷி வந்தியம் எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன், கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு பொய்யான அறிக்கைகளையும், அபாண்டமான குற்றச்சாட்டுகளை வெளியிட்டு இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட நினைக்கும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸுக்கு எங்கள் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறோம். கள்ளக்குறிச்சியில் நடந்த துயர சம்பவத்திற்கு, இந்தியாவிலேயே மிக சிறப்பாக செயல்பட்டு 24 மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர். 

ஆனால் ராமதாஸ் அவர்கள், நடந்து முடிந்த தேர்தலில் மக்கள் புறக்கணித்ததை மறைக்கும் வகையிலும், அதிமுக, பாஜக ஆட்சிகளில் நடந்த கள்ளச்சாராய சாவுகளை பற்றியெல்லாம் வாய் திறக்காத அவர், அபாண்டமான குற்றச்சாட்டுகளை எங்கள் மீது வைத்துள்ளார். 

அதை நிரூபித்தால், பொது வாழ்கையில் இருந்து விலக தயாராக உள்ளோம். நிரூபிக்கத் தவறினால், பொதுவாழ்கையில் இருந்து விலகத் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் தயாரா?

மதியம் 1 மணி நிலவரப்படி மருத்துவமனையில் இருந்தவர்கள் யாரும் இறக்கவில்லை. மூவர் இறந்ததாக சொல்லப்பட்டவர்கள் மருத்துவமனையில் இறக்கவில்லை, இல்லங்களில் இறந்து உள்ளனர்.  இறந்துபோன மூன்று பேரும் மருத்துவமனைக்கே வரவில்லை. மது அருந்தியை அவர்கள் மருத்துவமனையில் சொல்லவில்லை. 

பாதிக்கப்பட்ட மக்களுடன் எம்.எல்.ஏக்கள் உடன் இருந்தோம். மருத்துவமனைக்கு மக்களை கொண்டு போய் சேர்த்துள்ளோம். விளம்பரத்திற்காக அரசியல் ஆதாயம் தேட வந்தவர்கள்தான் அப்படி சொல்கின்றனர் என தெரிவித்தார். 

உதயசூரியன் எம்.எல்.ஏ பேட்டி

கள்ளச்சாராய வியாபாரி வீட்டில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, தேர்தல் நேரத்தில் வீடு வீடாக ஸ்டிக்கர் ஒட்டுவது வாடிக்கைதான். அதனால் இந்த இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூற முடியாது.  கள்ளக்குறிச்சி அதிமுக எம்.எல்.ஏ அரசியல் ஆதாயத்திற்காக செயல்படுகின்றார். எதிர்கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினரை பயன்படுத்திக் கொண்டு அரசியல் ஆதாயம் தேட முயல்கிறார்.

எங்கள் மீது பொய் குற்றச்சாட்டை வைத்து உள்ளனர். மூன்று தலைமுறையாக அரசியலில் உள்ளோம். 5 முறை எம்.எல்.ஏவாக உள்ளேன். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சிபிஐ விசாரணை கேட்கும் மருத்துவர் ராமதாஸ், தன் மகன் மீது மருத்துவக்கல்லூரி ஊழல் வழக்கில் சிபிஐ விசாரணை கூடாது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்?

கள்ளக்குறிச்சி விவகாரத்தின் பின்னணியில் உள்ளவர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு அடக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்து உள்ளார். 

பழங்குடியின மக்கள் வாழும் மலைப்பகுதிகளில், கள்ளச்சாராயம் என்பது வேறு, மெத்தனால், எத்தனால் என்பது வேறு, கல்வராயன் மலை பகுதியில் இருந்து  எனக்கு 30 ஆயிரம் ஓட்டு போடுவதால், அவர்களை நாங்கள் பாதுகாப்பதாக கூறுகிறார். இது போன்ற தீய செயல்களில் நாங்கள் ஈடுபடமாட்டோம். கள்ளக்குறிச்சியில் பாமக பருப்பு வேகாது. இதை மறைக்க இது போன்ற குற்றச்சாட்டுக்களை முன் வைக்கின்றனர்.  ராமதாஸ் மீதும் அன்புமணி மீதும் மான நஷ்ட வழக்கை தொடர உள்ளோம் என கூறினார்.  

அடுத்த செய்தி
கவனம் பெற்றவை