Spurious Liquor : கள்ளச்சாரய ஒழிப்பில் அரசு செய்ய வேண்டியது என்ன? – நிபுணர்கள் அறிவுரை
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Spurious Liquor : கள்ளச்சாரய ஒழிப்பில் அரசு செய்ய வேண்டியது என்ன? – நிபுணர்கள் அறிவுரை

Spurious Liquor : கள்ளச்சாரய ஒழிப்பில் அரசு செய்ய வேண்டியது என்ன? – நிபுணர்கள் அறிவுரை

Priyadarshini R HT Tamil
May 19, 2023 06:01 AM IST

Spurious Liquor : தமிழகத்தில் அண்மையில் ஏற்ட்ட கள்ளச்சாராய மரணங்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள நிலையில், அரசு உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அளித்தது குறித்த மீம்ஸ்கள் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் மக்களை காக்க அரசு என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கோப்புப்படம்
கோப்புப்படம்

அந்த பகுதி விஏஓ மற்றும் உதவியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

கள்ளச்சாராயம் விற்ற சிலர் கைதுசெய்யப்பட்டு, வழக்கு, குண்டர் சட்டம் மற்றும் கொலை வழக்கு ஆகியவை பாய்ந்துள்ளன.

காவல்துறை விசாரணை குறித்து வாரமொருமுறை அறிக்கை தாக்கல், வாரமொருமுறை வருவாய்துறை அதிகாரிகள் கள்ளச்சாராயம் குறித்து ஆலோசனைக் கூட்டங்கள், தொழிற்நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாடு, விநியோகத்தில் கூடுதல் கவனம்,

மது விலக்கு பிரிவில் நேர்மையான காவலர்கள் நியமனம், மக்களுக்கு கள்ளச்சாரயம் குறித்து போதிய விழிப்புணர்வு என பலகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில், கள்ளச்சாராய பிரச்னை அப்பகுதிகளில் பல ஆண்டுகளாக இருந்தும், இதுகுறித்து போலீஸ் புகாருக்குப் பின்னரும் நடவடிக்கைகள் எடுக்காதது ஏன்? கள்ளச்சாராயம் விற்ற சிலர் மட்டுமே தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

மரக்காணம் கலால் துறையைச் சேர்ந்த காவல் உதவி ஆய்வாளர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளபோதும், அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தவிர வேறு நடவடிக்கைகள் அவர் மீது இல்லை.

குறிப்பிட்ட மரக்காண சம்பவத்தில் 4 பாக்கெட் ரூ.100 என்றும், ஒரு பாக்கெட் வாங்கினால் ஒரு பாக்கெட் இலவசம் என கூவி, கூவி விற்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

மலிவு விலையில் விற்ற காரணத்தால், ஏற்கனவே கள்ளச்சாராய வேட்டையில் சிக்கிய சாராயத்தை அழிக்காமல் அதை கள்ளச்சாரயாம் விற்பவர்களிடம் கொடுத்து விற்கச் கூறியதாக குற்றச்சாட்டுக்களை அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே நாள்பட்ட அந்த சாராயத்தில் மாற்றம் அல்லது கலப்படம் செய்யப்பட்டதால், இறப்பு நிகழ்ந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதுவும் முறையாக விசாரிக்கப்பட வேண்டும். 

உயிரிழப்பிற்கு மெத்தனால் தான் காரணமா அல்லது வேறு வேதிப்பொருட்கள் இருந்ததா என ஆய்வு செய்யவேண்டும்.

சென்னையிலுள்ள தனியார் கெமிக்கல்ஸ் இடம் இருந்தே 1200 லிட்டர் மெத்தனால், சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டுள்ளது என விளக்கம் அளித்தாலும், அரசு கண்காணிப்பில், முழு கட்டுப்பாட்டில் உள்ள மெத்தனால் விற்பனையை அரசு கண்காணிக்கத் தவறியதேன்?

அதுவும் தமிழ்நாட்டில் மொத்தமே 11 மெத்தனால் உற்பத்தி தொழிற்நிறுவனங்களும் 71 மெத்தனாலை பயன்படுத்தும் நிறுவனங்கள் மட்டுமே உள்ள நிலையில் அவற்றை கண்காணிப்பது என்பது இயலாத காரியமா?

டாஸ்மாக் சாராயம் சமீபத்தில் 3 மடங்கு விலையேற்றம் கண்டுள்ள நிலையில், தமிழகத்தில் உற்பத்தி செய்ய முடியும் "கள்"ளை அரசு ஏன் அனுமதிக்கவில்லை?

 

கள்ளச்சாராய மரணத்திற்கு அரசு அறிவித்த நிவாரணம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் மீம்கள்
கள்ளச்சாராய மரணத்திற்கு அரசு அறிவித்த நிவாரணம் குறித்து சமூக வலைதளங்களில் பகிரப்படும் மீம்கள்

கடந்த ஆண்டு தமிழக பட்ஜெட்டில் 5.18 லிட்டர் கள்ளச்சாரயம் பிடிபட்டுள்ளது என்பது குறிப்பில் இருந்தும், உரிய நடவடிக்கை எடுக்க அரசு ஏன் முன்வரவில்லை.

எக்கியார் குப்பத்தில் ரெக்டிபைடு ஸ்பிரிட் எனும் மருந்து காய்ச்சப்பட்டு போதைக்கு பயன்படுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது. எனவே அதுகுறித்தும் அரசு தீவிர விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்தில் இதுபோன்ற இறப்புகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் புகழேந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.