தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Admk : திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்!

ADMK : திமுக அரசுக்கு கண்டனம் உள்ளிட்ட அதிமுக அவசர செயற்குழு கூட்டத்தின் முக்கிய தீர்மானங்கள்!

Aug 16, 2024, 06:42 PM IST

google News
ADMK : ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 'பிடரி சிலிர்த்த சிங்கம்' போல் தனித்து நின்று, கொள்கைக்காக லட்சிய வேட்கையோடு தலைநிமிர்ந்து நின்றது.
ADMK : ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 'பிடரி சிலிர்த்த சிங்கம்' போல் தனித்து நின்று, கொள்கைக்காக லட்சிய வேட்கையோடு தலைநிமிர்ந்து நின்றது.

ADMK : ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 'பிடரி சிலிர்த்த சிங்கம்' போல் தனித்து நின்று, கொள்கைக்காக லட்சிய வேட்கையோடு தலைநிமிர்ந்து நின்றது.

ADMK :  அதிமுக அவசர செயற்குழு கூட்டம் இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள எம்ஜிஆர் மாளிகையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த மாவட்ட செயலாளர் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டிருக்கும் நிலையில், தற்போது அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. 

அதிமுக சார்பில் வெளியான அவசர அறிக்கை:

இதைத்தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள  அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

"நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தலில் இரவு, பகல் பாராது கண்துஞ்சாது கடமையாற்றிய கழக நிர்வாகிகளுக்கும். கழக உடன்பிறப்புகளுக்கும்; கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அதன் நிர்வாகிகளுக்கும், பல்வேறு அமைப்புகளைத் தாங்கிய சங்கங்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுக்கும்; வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும் இச்செயற்குழு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்து, அசைக்க முடியாத அடித்தளத்தை கிராமங்கள்தோறும் அமைத்து மக்களின் மனதில் கழகம் நீக்கமற நிறைந்திருக்கச் செய்தார்.

'மக்களால் நான், மக்களுக்காகவே நான்', 'உங்களால் நான், உங்களுக்காகவே நான்' என்று தவ வாழ்வு வாழ்ந்த புரட்சித் தலைவி அம்மா அவர்கள் அரை நூற்றாண்டு காலத்திற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிநடை போட வைத்து, எதிரிகளை வீழ்த்தி, கழகத்தை வீரத்தோடும், விவேகத்தோடும் செம்மாந்து திகழ வைத்தார்.

கழகத்தை சூழ்ச்சியால் வீழ்த்தி, சுயநலத்திற்காக கபளீகரம் செய்ய திரைமறைவிலும், வெளிப்படையாகவும் நடைபெற்ற சூழ்ச்சிகளையும், சூதுகளையும் மிகவும் நுணுக்கமாகப் புரிந்துகொண்ட, கழகத் தொண்டர்களின் அன்புக் கட்டளைகளுக்கு ஏற்ப, 'கொள்கைக்காகவே வாழ்வோம், எதுவந்தாலும் ஏற்போம்' என்று 2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் களம் இறங்கியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்.

’கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம்’:

ஏற்றுக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக துணிவுடன் எதிர்கொண்டது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம். 'பிடரி சிலிர்த்த சிங்கம்' போல் தனித்து நின்று, கொள்கைக்காக லட்சிய வேட்கையோடு தலைநிமிர்ந்து நின்றது.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அதிகார பலம் படைத்தவரின் நிழலில், மக்களின் நலன்களையும், மாநிலத்தின் பெருமைகளையும் இழக்காமல், பதவி என்பது எங்களைப் பொறுத்தவரை மக்களுக்குப் பணியாற்ற ஒரு பாதையே தவிர, எல்லா நேரத்திலும் கொள்கைச் சிங்கங்களாகவே அரசியல் களமாடுவோம் என்பதை இந்தத் தேர்தல் உலகுக்கு உரக்கச் சொல்லி இருக்கிறது.

இனி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் அவ்வளவுதான் என்று 1980, 2004 மற்றும் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்போதும்; 1996 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின் போதும், ஏன் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவும் நம்மை ஏளனம் செய்தவர்களின் அகங்காரத்தை முறியடித்த பெருமை, லட்சியம் கொண்ட கழக உடன்பிறப்புகளுக்கு என்றென்றும் உண்டு.

மெகா கூட்டணி அமைத்து, அரசியலில் புது வியூகத்தை ஏற்படுத்தி, துரோகிகளை தோற்கடித்து, விடியா திமுக அரசை வீழ்த்தி, 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம் என்று சூளுரைப்போம்!

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்கு ஆற்றிய தொண்டுகளை, பணிகளை மனதில் கொண்டு நம் கூட்டணிக்கு வாக்களித்த தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு இச்செயற்குழு மீண்டும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானங்கள்:

1. 2024, நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் கழகக் கூட்டணிக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கும்; அயராது தேர்தல் பணியாற்றிய கழக நிர்வாகிகளுக்கும், கழகத் தொண்டர்களுக்கும், தோழமைக் கட்சியினருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.. கழகத்தின் வெற்றிக்காக அயராது உழைத்திட்ட கழகப் பொதுச் செயலாளர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களுக்கு நன்றியும், பாராட்டும்!

2. அ) நியாய விலைக் கடைகளில் அத்தியாவசியப் பொருட்கள் வழங்காத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

ஆ) விலையில்லா வேட்டி, சேலை வழங்குவதிலும், விலையில்லா 5 பள்ளிச் சீருடைகள் வழங்குவதிலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

3மக்கள் நலன் கருதி மின்கட்டண உயர்வை ரத்து செய்திடவும்: மாதாந்திர மின் கணக்கீட்டு முறையை அமல்படுத்திடவும் 9 விடியா திமுக அரசை வலியுறுத்தல்!

4தமிழ் நாட்டின் ஜீவாதார உரிமைகளைக் காப்பாற்றத் தவறிய விடியா திமுக அரசின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனம்!

5. மக்கள் நலன் கருதி, கழக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வந்த உன்னதமான பல திட்டங்களை, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக முடக்கி செயலிழக்கச் செய்து வரும் விடியா |திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

6. அ) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

ஆ) மீளவர்கள் நலனில் அக்கறை செலுத்தாத விடியா திமுக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கடும் கண்டனம்!

7. மத்திய நிதிநிலை அறிக்கையில், தமிழ் நாட்டிற்குத் தேவையான திட்டங்களை அறிவிக்காததற்கும்; போதுமான நிதியை ஒதுக்காததற்கும் மத்திய அரசுக்கு கண்டனம்!

ஆ) மருத்துவக் காப்பீடு பிரீமியத்திற்கு 18 சதவீத GST வரியை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தல்!

இ) வயநாடு நிலச் சரிவை, தேசியப் பேரிடராக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்தல்!

8. அ) தமிழ் நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவுக்குக் காரணமான விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!

ஆ) தொழில் வளர்ச்சி குன்றியதற்கு காரணங்களை அறிந்து, அவற்றை சரிவர நிவர்த்தி செய்யாத விடியா திமுக அரசுக்கு கண்டனம்!

இ) நிர்வாகத் திறமையின்மை காரணமாக, கடன்மேல் கடன் வாங்கியும், வரிமேல் வரி விதித்தும், மக்களை கடனாளியாக்கியதுதான் விடியா திமுக அரசின் சாதனை!

ஈ) விடியா திமுக அரசின் மூன்றாண்டு கால ஆட்சி -'சாதனை ஆட்சி அல்ல, வேதனை ஆட்சியே!

9.கழகப் பொதுச் செயலாளர், மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ் நாடு முன்னாள் முதலமைச்சர் 'புரட்சித் தமிழர்' திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்கள் வகுத்துத் தருகின்ற தேர்தல் வியூகப்படி, வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தலிலும்; 2026, சட்டமன்றப் பொதுத் தேர்தலிலும் கழகம் மகத்தான வெற்றி பெறும் வகையில், கழக நிர்வாகிகள் அனைவரும் தேர்தல் பணியாற்றி, வெற்றிக் கனியைப் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்களுக்கு சமர்ப்பிக்க சூளுரை!" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி