Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?-did actor ajith donate rs 35 crore to wayanad landslide relief work factcheck - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?

Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?

Fact Crescendo HT Tamil
Aug 11, 2024 05:15 PM IST

Ajith Kumar: “அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜித் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதியுதவி அறிவிப்பு; மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும்” என்று இருந்தது.

Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?
Fact Check: வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு ரூ.35 கோடி வழங்கினாரா நடிகர் அஜித்?

நியூஸ் கார்டு

புதிய தலைமுறை வெளியிட்டது போன்று நியூஸ் கார்டு ஃபேஸ்புக்கில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், “அள்ளிக் கொடுத்த தல. கேரள வயநாடு நிலச்சரிவு நிவாரணப் பணிகளுக்கு தல அஜீத் சார்பில் ரூ.35 கோடி நிதியுதவி அறிவிப்பு. நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதற்கு நிதியுதவி அறிவிப்பு; மக்களுக்கு தேவையான நிவாரணப் பொருட்களும் அனுப்பி வைக்கப்படும் – அஜீத்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா அறிவிப்பு” என்று இருந்தது. இந்த பதிவை பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது உண்மையா?

கேரளா வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பாதிப்புக்கு நடிகர் அஜித் தரப்பில் இருந்து ரூ.35 கோடி நிதி உதவி வழங்கப்படுவதாக அவரது ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால், அப்படி எந்த ஒரு அறிவிப்பும் வெளியானதாக செய்தி எதுவும் இல்லை. மேலும், இந்த நியூஸ் கார்டும் உண்மையானது போல இல்லை. எனவே, இது தொடர்பாக ஆய்வு செய்தோம்.

முதலில் சுரேஷ் சந்திரா இப்படி ஏதும் அறிவிப்பு வெளியிட்டுள்ளாரா என்று அறிய அவரது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தை பார்த்தோம். படம் தொடர்பான அறிவிப்புகள் இருந்தன. ஆனால், வயநாட்டுக்கு நிதி உதவி அளித்ததாக எந்த தகவலும் இல்லை.

அடுத்ததாக நியூஸ் கார்டு பற்றி ஆய்வு செய்தோம். அந்த நியூஸ் கார்டை பார்க்கும் போதே போலியானது என்று தெரிவதால் நேரடியாக, புதிய தலைமுறை டிஜிட்டல் பிரிவு நிர்வாகிக்கு இந்த நியூஸ் கார்டை அனுப்பி வைத்தோம். அவரும் இது போலியானது என்று உறுதி செய்தார். மேலும், புதிய தலைமுறையில் இந்த நியூஸ் கார்டு போலியானது என்று குறிப்பிட்டு வெளியான பதிவையும் நமக்கு அனுப்பினார்.

இதேபோன்று அஜித் தரப்பிலும் பேசி உறுதிப்படுத்தியுள்ளோம்.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் வயநாட்டுக்கு ரூ.35 கோடி வழங்கிய நடிகர் அஜித் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்று உறுதி செய்யப்படுகிறது.

முடிவு:

வயநாடு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக நடிகர் அஜித் ரூ.35 கோடி வழங்கினார் என்று பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் ஃபேக்ட் கிரஸண்டோ தமிழ் உறுதி செய்துள்ளது. எனவே, வாசகர்கள், இத்தகைய தவறான செய்தி, புகைப்படங்கள், வீடியோ போன்றவற்றை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம் என கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயநாட்டில் நடந்த பேரிடரை நேற்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா நேரில் பார்வையிட்டனர். பிரதமரிடம் நிதியுதவி கோரியிருக்கிறார் அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன். மிகப் பெரிய பேரழிவாக மாறியிருக்கிறது வயநாடு.

பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட்டதை ராகுல் வரவேற்றிருக்கிறார்.

பொறுப்புத் துறப்பு

இந்தச் செய்தி முதலில் Tamil Fact Crescendo-இல் வெளியிடப்பட்டது மற்றும் சக்தி கலெக்டிவின் ஒரு பகுதியாக HT Digital ஆல் மறுபிரசுரம் செய்யப்பட்டது.

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.