Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு!
தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு!

Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு!

Karthikeyan S HT Tamil
Jul 07, 2024 11:59 AM IST

Armstrong Murder, Mayawati: பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி பந்தர் கார்டன் அரசு பள்ளியில் வைக்கப்பட்டுள்ள, ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு
Armstrong Murder: ‘தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை’ - ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய மாயாவதி பேச்சு

அரசு தீவிரமாக செயல்பட்டிருந்தால் உண்மையான குற்றவாளிகளை பிடித்திருக்கலாம். முதலமைச்சர் சட்டம்-ஒழுங்கை காக்க வேண்டும். தலித் மக்களை முதலமைச்சர் பாதுகாக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் மரண வழக்கை உடனடியாக சிபிஐக்கு மாற்ற வேண்டும். சட்டம் ஒழுங்கை சீர்படுத்த வேண்டும். பிற்படுத்தப்பட்ட, எளிய மக்களின் நலனை பாதுகாக்க வேண்டும். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினருக்கு பகுஜன் சமாஜ் கட்சி உறுதுணையாக இருக்கும். சட்டத்தை நமது கையில் எடுக்க வேண்டாம் என்று பகுஜன் சமாஜ் கட்சியிரை கேட்டுக் கொள்கிறேன்." என்று அவர் கூறினார்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை அவரது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவத்திற்கு பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி உள்பட பல கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப் பதிவு செய்து இதுவரை 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

அவசர வழக்கு

கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள பகுஜன் சமாஜ் கட்சி மாநில அலுவலக வளாகத்தில் அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பவானி சுப்பராயன், குடியிருப்புப் பகுதியில் மணிமண்டபம் கட்ட எப்படி அனுமதிக்க முடியும்?, ஆம்ஸ்ட்ராங் மரணம் பெரிய இழப்பாக இருந்தாலும் சட்ட விதிகளை மீற முடியாது. விஜயகாந்த் நினைவிடம் பெரிய அளவில் உள்ளது. அதனுடன் ஒப்பிட முடியாது. ஆம்ஸ்ட்ராங் உடலை மயானம் என அறிவிக்கப்பட்ட இடத்தில் தான் உடல் அடக்கம் செய்ய முடியும். தற்போதைக்கு அரசு ஒதுக்கும் இடத்தில் அடக்கம் செய்துவிட்டு , வேறு இடத்தில் மணிமண்டபம் கட்டிக் கொள்ளலாம். தற்போதைக்கு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

எந்த சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படக்கூடாது. நாளை வீர வணக்கம் போன்ற நிகழ்வின் போது ஆயிரக்கணக்கான மக்கள் வந்தால் என்ன செய்வது. ஹத்ராஸ் சம்பவத்தை பார்த்தீர்களா? வேறு பெரிய சாலை, விசாலமான இடம் இருந்தால் சொல்லுங்கள், அதன்பிறகு உத்தரவு பிறப்பிக்கிறேன்" என்று நீதிபதி பவானி சுப்புராயன் தெரிவித்தார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

மேலும் தமிழ்நாட்டின் சமீபத்திய செய்திகள், குற்றச் செய்திகள் , ட்ரெண்டிங் செய்திகள் , அரசியல் செய்திகளை , இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் செய்தி தளத்தின் தமிழ்நாடு பிரிவில் பார்க்கவும்.