தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை.. 26 விமான சேவைகள் பாதிப்பு.. பயணிகள் கடும் அவதி!

சென்னையில் நள்ளிரவில் சூறைக்காற்றுடன் பெய்த பலத்த மழை.. 26 விமான சேவைகள் பாதிப்பு.. பயணிகள் கடும் அவதி!

Divya Sekar HT Tamil

Jun 19, 2024, 07:33 AM IST

google News
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன. (Representative Image (Unsplash))
சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

சென்னையில் நள்ளிரவில், சூறைக்காற்று இடி மின்னலுடன் பெய்த பலத்த மழை காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக 26 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது . 12 வருகை விமானங்கள் சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்து தக்களித்தன. அதைப்போல் 14 புறப்பாடு விமானங்கள், தாமதமாக புறப்பட்டு சென்றன‌.

உங்கள் நகரின் வானிலை அறிய இங்கே கிளிக் செய்க

விமான சேவைகள் பாதிப்பு

சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் இரண்டாவது நாளாக, நேற்று நள்ளிரவில் பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, சென்னை விமான நிலையத்தில், இரண்டாவது நாளாக நேற்று நள்ளிரவிலும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

கேரள மாநிலம் கோழிக்கோடு இருந்து 70 பயணிகளுடன் சென்னை உள்நாட்டு விமான நிலையத்துக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், டெல்லியில் இருந்து 158 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டிருந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் ஆகிய இரண்டு விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்ட மடித்தன. 

வட்டமடித்து பறந்து தத்தளித்த விமானம்

அதன் பின்பு கோழிக்கோடு விமானம் திருச்சிக்கும், டெல்லி விமானம், பெங்களூர்க்கும் திருப்பி அனுப்பப்பட்டன. அதைப்போல் மதுரை, மும்பை, கோவை, டெல்லி, ஹைதராபாத், கோவா, வாரணாசி உள்ளிட்ட 10 விமானங்கள், சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்தன. அதன் பின்பு மழை, சூறைக் காற்று, இடி மின்னல் வேகம் குறைந்த பின்பு, இந்த விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னையில் தரை இறங்கின.

அதை போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டியது விமானங்களான துபாய், குவைத், சிங்கப்பூர், கோலாலம்பூர், அபுதாபி, பாங்காக், டெல்லி, ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர், திருவனந்தபுரம் உள்ளிட்ட 14 விமானங்கள், இடி மின்னல் சூறைக்காற்று வேகம் குறைந்த பின்பு, தாமதமாக சென்னையில் இருந்து புறப்பட்டு சென்றன.

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதி

சென்னை விமான நிலையத்தில் நேற்று இரவு திடீரென பெய்த பலத்த மழை, இடி மின்னல் சூறைக்காற்று காரணமாக, இரண்டு விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் பெங்களூர், திருச்சிக்கு திரும்பிச் சென்றதோடு,10 வருகை விமானங்கள், 14 புறப்பாடு விமானங்கள் தாமதம் ஆகி, 26 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டதால், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

18.06.2024 மற்றும் 19.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

20.06.2024 மற்றும் 21.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

22.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டம், கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.06.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

24.06.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்

அடுத்த செய்தி