தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Mini Bus: மீண்டும் வருகிறது மினி பஸ்.. சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் தெரியுமா? - விபரம் இதோ!

Mini Bus: மீண்டும் வருகிறது மினி பஸ்.. சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் தெரியுமா? - விபரம் இதோ!

Karthikeyan S HT Tamil
Jun 18, 2024 10:29 AM IST

Mini Bus: தமிழ்நாட்டில் மினி பஸ்களை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mini Bus: மீண்டும் வருகிறது மினி பஸ்.. சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் தெரியுமா? - விபரம் இதோ!
Mini Bus: மீண்டும் வருகிறது மினி பஸ்.. சென்னையில் எந்தெந்த பகுதிகளுக்கு இயக்கப்படும் தெரியுமா? - விபரம் இதோ!

தமிழ்நாட்டில கடந்த 1996-2001ம் ஆண்டு காலகட்டத்தின் போது மினி பேருந்து சேவை அறிமுகமானது. அரசு பேருந்து நேரடியாக இயக்க முடியாத தொலைதூர கிராமப் பகுதிகளுக்கு சேவை வழங்கும் வகையில் இந்த மினி பேருந்து இயக்கப்பட்டது. இந்த மினி பேருந்துகள், 16 கி.மீ.வரை சேவையில்லாத வழித்தடத்திலும், 4 கி.மீ. முக்கிய சாலைகளில் செல்வதற்கும் அனுமதி வழங்கப்பட்டது.

மீண்டும் மினி பஸ்

இந்த நிலையில், தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. தற்போது மினி பேருந்துகளை இயக்க மீண்டும் அனுமதி வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, ஒருங்கிணைந்த மினி பஸ் திட்ட வரைவு அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் மினி பஸ்களை இயங்குவதற்கான அனுமதி வழங்கப்படவுள்ளது.

சென்னையில் எந்த பகுதியில் மினி பஸ்

சென்னையில் தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், அடையார் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படாது. அதே நேரம், திருவொற்றியூர், மணலி, மாதவரம், அம்பத்தூர், வளசரவாக்கம், ஆலந்தூர், பெருங்குடி, சோளிங்கநல்லூர் பகுதிகளுக்கு மினி பஸ் சேவை வழங்கப்படும்.

GPS வசதி

மேலும், தமிழகம் முழுவதும் எந்தெந்த வழித்தடத்தில் மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி வழங்குவது என RTO-க்கள் முடிவு செய்யவார்கள் எனவும் அதிகபட்சமாக 25 கி.மீ தூரம் வரை மினி பஸ்களை இயக்க அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 18 கிலோ மீட்டர் சேவை இல்லாத வழித்தடத்திலும் 8 கிலோமீட்டர் சேவை உள்ள வழித்தடத்திலும் அனுமதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

எத்தனை பேர் பயணம் செய்யலாம்?

ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இல்லாமல் ஒரு மினி பேருந்தில் அதிகபட்சமாக 25 பேர் வரை பயணம் செய்யும் வகையில் இருக்கை வசதி இருக்கலாம். அனைத்து மினி பஸ்களிலும் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து கேட்பு கூட்டம்

இந்த வரைவு அறிக்கை தொடர்பாக பொதுமக்கள் தங்களது கருத்துக்களை 30 நாட்களுக்குள் தெரிவிக்கலாம் என்றும், இதன்படி ஜூலை 14ம் தேதிக்குள் தங்களது கருத்துக்களை தெரிவிக்கலாம். அதற்கு பிறகு உள்துறை முதன்மை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா தொடங்கி வைத்த 200 மினி பேருந்துகள்

முன்னதாக, கடந்த 2013ஆம் ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா, 200 மினி பேருந்துகளை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் பேருந்து வசதி இல்லாத பகுதிகளுக்கு தொடங்கி வைத்தார். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு செப்டம்பரில் தொலைதூர குடியிருப்பு பகுதிகளுக்கு இணைப்பை அதிகரிக்க, மேலும் 100 கூடுதல் மினி பேருந்துகள் இயக்கப்படும் என ஜெயலலிதா அறிவித்தார். இந்த அறிவிப்பின் மூலம் மாநகரில் இயக்கப்படும் சிறிய பேருந்துகளின் எண்ணிக்கை 200இல் இருந்து 300 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பினை நிறைவேற்றவில்லை.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.