தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  Weather Update: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..சட்டென்று மாறப்போகும் வானிலை!

Weather Update: சென்னை மக்களுக்கு குட் நியூஸ்..சட்டென்று மாறப்போகும் வானிலை!

Karthikeyan S HT Tamil

Mar 18, 2023, 01:46 PM IST

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பல இடங்களில் மார்ச் முதல் வாரத்தில் இருந்து வெப்பநிலை அதிகரிக்கத் தொடங்கியது. இந்த வெப்பநிலை தற்போது படிப்படியாக அதிகரித்து வருகிறது. சென்னை, ஈரோடு, நாமக்கல், சேலம் உள்ளிட்ட இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெப்பக் காற்று வீசுவதால் பொது மக்கள் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், குழந்தைகள், வயதானோர், கர்ப்பிணிகள் முடிந்தவரை வீடுகளுக்குளே இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

இதனிடையே தென் இந்திய பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திப்பது தொடர்வதால், தமிழகத்தில் திடீர் மழை பெய்து வருகிறது. தமிழகத்தின் ஒருசில இடங்களில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், சென்னையில் மேலும் இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வரும் 22 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.

இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில், மார்ச் 22-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும்.

ஆந்திர கடலோரப்பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  எனவே இன்று (மார்ச் 18) மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

டாபிக்ஸ்