தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் திட்டமிட்ட சதியா ? - காயத்ரி ரகுராம் பதில்!

பாஜகவிலிருந்து சஸ்பெண்ட் திட்டமிட்ட சதியா ? - காயத்ரி ரகுராம் பதில்!

Karthikeyan S HT Tamil

Nov 22, 2022, 04:16 PM IST

சென்னை: பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை: பாஜகவில் இருந்து 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பது குறித்து காயத்ரி ரகுராம் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக இருந்து வந்த காயத்ரி ரகுராம் அந்த பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

Savukku Shankar: கண்களை கட்டி கண்மூடித்தனமாக சவுக்கு சங்கர் மீது தாக்குதல்? விசாரணக்கு உத்தரவு

நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழை கொட்ட போகுது.. ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்!

Today Gold Rate: வாரத்தின் முதல் நாளில் மீண்டும் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை..இன்றைய நிலவரம் இதோ..!

இந்த அறிக்கையை டுவிட்டரில் பகிர்ந்த காயத்ரி, " நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், என்னை நேசிப்பவர்கள் என்னிடம் பேசுவார்கள். அதை யாராலும் தடுக்க முடியாது. தேசத்துக்காக தொடர்ந்து பணியாற்றுவேன்." என்று பதிவிட்டுள்ளார்.

மேலும், கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறித்து காயத்ரி ரகுராம் தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் கூறுகையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் எனக்கு வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. என் தரப்பு விளக்கத்தை கேட்காமலே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சிக்கு கலங்கம் விளைவித்ததாக கூறி அறிக்கை வெளியாகி இருக்கிறது. தனிப்பட்ட முறையில் என்னை தாக்கியவர்களுக்கு, நேரடியாக பதிலடி கொடுத்தேன். நான் கட்சிக்கு எதிராக தன்னிச்சையாக செயல்படவில்லை. பாஜக தேசிய தலைமைக்கு இங்கு நடப்பது தெரியும் என நினைக்கிறேன். பாஜக மேலிடம் அழைத்தால் நிச்சயம் விளக்கம் அளிப்பேன். மேலிடம் அழைக்கும்போது, தமிழக பாஜகவில் நடப்பதை தெளிவாக தெரிவிப்பேன்." என்றார் காயத்ரி ரகுராம்.

டாபிக்ஸ்