தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  எப்படி எல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க.. கோவை பெண் கைது!

எப்படி எல்லாம் மோசடி பண்றாங்க பாருங்க.. கோவை பெண் கைது!

Divya Sekar HT Tamil

Mar 26, 2023, 09:40 AM IST

கோவையில் மாதவாடகைக்கு ஒப்பந்தம் செய்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கோவையில் மாதவாடகைக்கு ஒப்பந்தம் செய்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கோவையில் மாதவாடகைக்கு ஒப்பந்தம் செய்து கார்களை அடமானம் வைத்து மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் உடுமலையை சேர்ந்தவர் ரங்கநாதன் (42). இவர் அனு ஆதித்யா டிரான்ஸ்போர்ட் லாஜிஸ்டிக்ஸ் என்ற நிறுவனத்தில் மாத வாடகைக்கு வாகனங்கள் தேவை என்ற அறிவிப்பை பார்த்தார்.தனது காரை வாடகைக்கு விட முடிவு செய்து, அந்த நிறுவனத்தை சேர்ந்த கோவை சரவணம்பட்டியில் உள்ள யசோதா தேவி (32) என்பவரை ரங்கநாதன் சந்தித்தார்.

ட்ரெண்டிங் செய்திகள்

Weather Update: ‘8 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப்போகும் கனமழை! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!’

EPS, DMK Government: திமுக அரசின் 3 ஆண்டு கால ஆட்சி சாதனை அல்ல வேதனை..இன்னும் இந்த ஆட்சி தொடர்ந்தால்- விளாசும் இபிஎஸ்!

Weather Update: சென்னையில் சட்டென மாறிய வானிலை..14 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்!

Tamilnadu Agricultural Education: வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் தொடக்கம்! இடஒதுக்கீடு, கட்டணம் - முழு விவரம்

அப்போது ரங்கநாதன். ஓராண்டு காலத்திற்கு தனது காரை மாதம் ரூ.22 ஆயிரம் வாடகைக்கு விட ஒப்பந்தம் போட்டார். தொடர்ந்து முதல் 2 மாதம் மட்டும் யசோதா தேவி வாடகை பணம் கொடுத்தார். 3-வது மாதம் முதல் வாடகை யசோதா தேவி கொடுக்க வில்லை.

எனவே ரங்கநாதன், யசோதா தேவியை செல்போனில் தொடர்புகொண்டார். ஆனால் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் என்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், யசோதா தேவியின் வீட்டிற்கு சென்ற போது பூட்டிக் கிடந்தது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் கொடுத்த புகாரின் பேரில் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் யசோதாவை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து செல்போன், கணினி உள்ளிட்ட 105முக்கிய ஆவணங்கள் கைப் பற்றப்பட்டன. விசாசாரணையில் யசோதாதேவி, பலரிடம் 20 கார்களை மாத வாடகை ஒப்பந்தம் செய்து கொண்டு முதல் 2 மாதம் மட்டும் வாடகையை வழங்கி உள்ளார். அதன்பிறகு வாடகைக்கு ஒப்பந்தம் செய்த கார்களை அடகு வைத்து தலா ரூ.2 லட் சம் முதல் ரூ.5 லட்சம் வரை பெற்றுக் கொண்டு பல லட் சம் மோசடி செய்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து யசோதாதேவியை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவ ரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 7 கார்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர். மீதம் உள்ள 13 கார்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்