தமிழ் செய்திகள்  /  தமிழ்நாடு  /  அரும்பாக்கம் வங்கி கொள்ளை: 2 நாள்களில் 4 பேர் கைது! ஒரே பள்ளியில் பயின்றவர்கள்

அரும்பாக்கம் வங்கி கொள்ளை: 2 நாள்களில் 4 பேர் கைது! ஒரே பள்ளியில் பயின்றவர்கள்

Aug 15, 2022, 10:24 PM IST

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் கொள்ளை நடைபெற்று 2 நாள்களுக்குள் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகனை கைது செய்துள்ள போலீசார் விரைவில் மற்றவர்களை கைது செய்து கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டும் என தெரிவித்தனர். (HT_PRINT)
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் கொள்ளை நடைபெற்று 2 நாள்களுக்குள் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகனை கைது செய்துள்ள போலீசார் விரைவில் மற்றவர்களை கைது செய்து கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டும் என தெரிவித்தனர்.

சென்னை அரும்பாக்கத்தில் உள்ள வங்கியில் கொள்ளை நடைபெற்று 2 நாள்களுக்குள் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேரை போலீசார் பிடித்துள்ளனர். இந்த கொள்ளை சம்பவத்துக்கு மூளையாக செயல்பட்ட முருகனை கைது செய்துள்ள போலீசார் விரைவில் மற்றவர்களை கைது செய்து கொள்ளைபோன நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டும் என தெரிவித்தனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதை போல் வங்கியில் பணிபுரிந்த நபரே தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அரும்பாக்கம் பெடரல் வங்கியில் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயகுமார் தன்சிங் கொலைக்கு போலீஸ்தான் காரணம்!’ ஆதாரத்தை அடுக்கும் அன்புமணி ராமதாஸ்!

Jayakumar Dhanasingh: ‘நெல்லை காங்கிரஸ் பிரமூகர் எரித்துக் கொலையா?’ விளாசும் ஈபிஎஸ்! சந்தேகம் கிளப்பும் அண்ணாமலை

Congress: ’காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தனசிங் மரணத்திற்கு நான் காரணமா?’ ரூபி மனோகரன் எம்.எல்.ஏ பரபரப்பு பேட்டி!

Weather Update: ’மழையில் நனைய ரெடியா!’ தமிழ்நாட்டின் இன்று மழை எச்சரிக்கை! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

பெடரல் வங்கியின் மற்றொரு கிளையில் மண்டல மேலாளராக பணியாற்றி வந்த முருகன் என்பவர், ஜிம்மில் தன்னுடன் இணைந்து ஒர்க்அவுட் செய்ய வரும் நண்பர்களுடன் சேர்ந்து இந்த கொள்ள சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். சுமார் 10 நாள்கள் வரை திட்டம் தீட்டி இந்த கொள்ளை சம்பவம் நிகழ்த்தப்பட்டிருப்பதும், இதற்கு மூளையாக முருகன் செயல்பட்டிருப்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

முன்னதாக, சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும், முதற்கட்ட விசாரணைக்கு பிறகும் முருகன் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதாக சந்தேகித்த போலீசார் அவரை பிடிக்க வலை விரித்தனர். இதில் முருகனுடன் கொள்ளையில் ஈடுபட்ட பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் சிக்கினர். இவர்களிடமிருந்து 18 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டது.

இவர்களிடம் பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் முருகனை தீவிரமாக தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். நான்கு தனிப்படைகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த நிலையில், தலைமறைவாகி இருந்த முருகனும் பிடிபட்டார்.

இதுதொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அரும்பாக்கம் வங்கியில் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொள்ளை போன 31.7 கிலோ தங்கத்தில் தற்போது 18 கிலோ மீட்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நகைகளும் இன்னும் சில நாள்களில் மீட்க்கப்படும்.

கொள்ளை தொடர்பாக 2 பேர் தேடி வருகிறோம். கொள்ளை நடைபெற்றபோது வங்கியில் 3 ஊழியர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

கொள்ளையர்கள் கத்தி வைத்திருந்தாலும் கொள்ளை அடிக்கும்போது அதை பயன்படுத்தவில்லை. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது எந்தவொரு குற்ற வழக்குகளும் இல்லை.

முன்கூட்டியே திட்டமிட்டு இந்த கொள்ளை சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. எழு கொண்ட குழு இந்த கொள்ளை சம்பவத்துக்கான திட்டம் தீட்டியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் பயின்றுள்ளார்கள் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடந்த 10 நாள்களுக்கு மேல் இந்த கொள்ள தொடர்பாக திட்டம் தீட்டியுள்ள இவர்கள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்தும், சிசிடிவி கேமராக்கிளில் ஸ்ப்ரே அடித்தும் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

கொள்ளையில் ஈடுபட்டவர்களில் சூர்யா என்பவர் தலைமறைவாக இருந்து வருகிறார். அவரை விரைவில் பிடித்து இன்னும் சில நாள்களில் கொள்ளையடிக்கப்பட்ட மொத்த நகைகளும் மீட்கப்பட்டும்.

இரு சக்கர வாகனத்தில் சென்று கொள்ளையர்கள் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். வங்கியில் ஏன் எச்சரிக்கை மணி ஒலிக்கவில்லை என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்,

டாபிக்ஸ்