தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Evks Elangovan Recovers From Corona

கொரோனாவிலிருந்து மீண்டார் ஈவிகேஎஸ் இளங்கோவன் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

Mar 22, 2023, 01:06 PM IST

E. V. K. S. Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்றிலிருந்து அவர் மீண்டுள்ளார்.
E. V. K. S. Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்றிலிருந்து அவர் மீண்டுள்ளார்.

E. V. K. S. Elangovan: ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில் தற்போது தொற்றிலிருந்து அவர் மீண்டுள்ளார்.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர் கொரோனாதொற்றியில் இருந்து மீண்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ட்ரெண்டிங் செய்திகள்

Summer Rain Warning: ’கோடை மழையில் நனைய ரெடியா! இரவு 11.15 வரை 8 மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!’ வானிலை மையம் அறிவிப்பு!

BJP VS DMK: ’மீண்டும் ஒரு வேங்கை வயல் சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம்!’ ஸ்டாலினை விளாசும் எல்.முருகன்!

Ooty and Kodaikanal E-Pass: ’ஊட்டி. கொடைக்கானல் செல்ல இ-பாஸ் அவசியம்!’ நீதிபதிகள் சொன்ன முழு விவரம் இதோ!

Weather Update: ‘அதிகரிக்கும் வெப்பம்! பெய்யப்போகும் மழை! எங்கு தெரியுமா?’ இதோ விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கடந்த மார்ச் 15ஆம் தேதி சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மூச்சுத்திணறல் மற்றும் திடீர் நெஞ்சுவலி அவருக்கு ஏற்பட்டிருந்ததாகவும், லேசான நுரையீரல் தொற்று அவருக்கு இருந்துள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தனர்.

சிகிச்சை பெற்று வரும் ஈவிகேஎஸ் இளங்கோவனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கும் இதயவியல் நிபுணர் மூர்த்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், ஈவிகேஎஸ் இளங்கோவன் நன்றாக உள்ளார். ஓரிரு நாளில் வீடு திரும்பலாம் என தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு செயற்கை சுவாசம் பொறுத்தப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரத்தத்தில் ஆக்சிஜன் அளவை சமநிலைப்படுத்தும் வகையில் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக மருத்துவமனையில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது.

தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு விரைவில் மாற்றப்படுவார் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த 2 தினங்களில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று உள்ளதால் நுரையிரல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாகவும், இதனால் மூச்சுவிடுவதில் சிரமம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு XBB வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதால் செயற்கை ஆக்சிஜன் உதவியுடன் சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஈவேரா திருமகன் மறைவை  தொடர்ந்து நடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனின் உடல் நலக்குறைவு அக்கட்சியினர் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. 

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

டாபிக்ஸ்