தமிழ் செய்திகள்  /  Tamilnadu  /  Dgp Sylendra Babu Advice To All Police Officer

DGP : புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் -டிஜிபி

Divya Sekar HT Tamil

Sep 10, 2022, 03:14 PM IST

காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் கனிவுடன் நடந்து கொள்ளுங்கள் என டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

சென்னை : தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அதில்,”காவல் நிலையங்களுக்கு புகார் கொடுக்க வருபவர்களிடம் போலீஸ் நிலையங்களில் இருப்பவர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். புகார்தாரர்களிடம் சரியான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டும்.

ட்ரெண்டிங் செய்திகள்

TN Chief Minister Stalin: ஆறுநாட்கள் கொடைக்கானலில் தங்கும் முதலமைச்சர் - டிரோன்கள் பறக்கத் தடை விதிப்பு

Weather Update: 'வெப்ப அலை வீசும்.. பார்த்து மக்களே.. வெளியில் சுத்தாதீங்க':வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

TN Wet Land : பரந்தூர் ஈரநிலங்கள் காக்கப்படுவதை உயர்நீதிமன்றம் உறுதி செய்யுமா – சூழல் ஆர்வலர்கள் கேள்வி!

Weather Update: ’மக்களே உஷார்! தமிழ்நாட்டில் 42 டிகிரி செல்சியஸ் வரை உயரும் வெப்பநிலை!’ வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சில போலீஸ் அதிகாரிகள் எதிர்மறையான சிந்தனையுடன் உள்ளனர். புகார்தாரர்கள் சில நேரங்களில் உயர் அதிகாரிகளை அணுகி இருந்தால் அதனை அவர்களிடம் சுட்டிக்காட்டி பேசக்கூடாது.

புகார்தாரர்களிடம் துன்புறுத்தும் வகையில் செயல்படுவது காவல் துறை மீதான நன்மதிப்பை குறைக்கும் என்பதை உணர வேண்டும். காவல் துறைக்கான அதிகாரம் என்பது பொறுப்பு என்பதை அதிகாரிகள் உணர வேண்டும்” என அதில் கூறப்பட்டுள்ளது.

டாபிக்ஸ்