Cyclone Remal updates: இன்று இரவு கரையை கடக்கும் ரீமல் புயல்! தமிழ்நாட்டில் உயரும் வெப்பம்! வானிலை மையம் எச்சரிக்கை!
May 26, 2024, 02:05 PM IST
Cyclone Remal updates: ரீமல் புயலானது வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (26.05.2024) நள்ளிரவு, வங்க தேச - கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே வங்கதேச மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது
நேற்று காலை (25-05-2024) மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடக்கு திசையில் நகர்ந்து வடக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நேற்று மாலை 1730 மணி அளவில் ரீமல் புயலாக வலுப்பெற்று இன்று (26-05 2024) காலை 0530 மணி அளவில் "தீவிர புயலாக" வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவியது.
இன்று நள்ளிரவு கரையை கடக்கும் ரீமல் புயல்
இது இன்று (26-05-2024) காலை 0830 மணி அளவில் வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச கேப்புப்பாராவிற்கு தெற்கு தென்மேற்கே சுமார் 260 கி.மீ தொலைவிலும், வங்கதேச மங்லாவிற்கு தெற்கே சுமார் 310 கி.மீ தொலைவிலும் மேற்கு வங்காளம் சாகர் தீவிற்கு, தெற்கு தென்கிழக்கே சுமார் 280 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு திசையில் நகர்ந்து, இன்று (26.05.2024) நள்ளிரவு, வங்க தேச - கேப்புப்பாராவிற்கும், மேற்கு வங்காளம் சாகர்தீவிற்கும் இடையே வங்கதேச மங்லாவிற்கு அருகில் கரையை கடக்கக்கூடும் அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 110 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 135 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்
26.05.2024 மற்றும் 27.05.2024 தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
28.05.2024 முதல் 30.05.2024 வரை தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
31.05.2024 மற்றும் 01.06.2024 தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய வேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அடுத்த ஐந்து தினங்களுக்கான அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு
26.05.2024 முதல் 30.05.2024 வரை அடுத்த 5 தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக 2-3" செல்சியஸ் படிப்படியாக உயரக்கூடும்.
26:05 2024: அடுத்த 24 மணி நேரத்திற்கு அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பாகவும்/இயல்பை விட சற்று குறையக்கூடும்.
27.05.2024 அதிகபட்ச வெப்பநிலை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை ஒட்டி இருக்கக்கூடும்.
28.05.2024 முதல் 30.05.2024 வரை அதிகபட்ச வெப்பநிலை, தமிழகம் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பாகவும்/ இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:-
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 39" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை 39°40' செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
டாபிக்ஸ்